The South Indian Cine, Television Artistes and Dubbing Artistes Union has inaugurated a dubbing studio dedicated to the legendary singer S P Balasubrahmanyam.
This studio has been named as SPB Studio and was inaugurated by actor and dubbing union president Radha Ravi.
Following the legend SPB’s unexpected death Radha Ravi made an announcement that a dubbing studio will be launched in the singer’s name and the same became a reality.
Singer SP Balasubrahmanyam was also a popular dubbing artiste and was the voice of actor Kamal Haasan in the Telugu dubbed versions of his superhit movies.
சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில்
“எஸ்பிபி ஸ்டூடியோ” என்ற பெயரில் டப்பிங் ஸ்டூடியோ
இன்று சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் ,
டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் திரு.எஸ.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவாக ….
“எஸ்பிபி ஸ்டூடியோ” என்று பெயரில் , ஒரு டப்பிங் ஸ்டூடியோவினை,டப்பிங் யூனியன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் ,செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தியபோது ,அவரது நினைவாக டப்பிங் ஸ்டூடியோ நிறுவப்படும் என்று ,டப்பிங் யூனியன் தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்கள் கூறியவாறே,இன்று அந்த ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய மற்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஸ்டூடியோவினை தலைவர் திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக தெரிவித்தனர்.
**********