”ரைட்டர்” படத்திற்கு என்ன மாதிரியான போஸ்டர் வரும் என்று தினம் தினம் எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் கபிலனும் சந்தோஷ் நாராயணனும்.

726

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்

இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.

சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி.

காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.

மேலும், படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு போஸ்டரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

படத்தில் ஒரு மிகப்பெரிய வலியை இருப்பதாக ஒவ்வொரு போஸ்டரையும் நாம் காணும்போது புரிகிறது. இப்படத்தின் டிசைன் பணிகளை கபிலன் மற்றும் சந்தோஷ் நாராயணன் செய்து வருகிறார்கள்.

அடுத்தநாள் ”ரைட்டர்” படத்திற்கு என்ன மாதிரியான போஸ்டர் வரும் என்று தினம் தினம் எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் கபிலனும் சந்தோஷ் நாராயணனும்.

பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது “ரைட்டர்”.

கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com