“அவள் அப்படித்தான்”
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர் ‘அவள் அப்படித்தான்’ .இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் ,கமலேஷ், மௌலி , பிர்லா போஸ் , விஜய் குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
தனது கணவன் பிரேமை கொலை செய்த குற்றத்திற்காக தமிழ்ச்செல்வி சிறை செல்கிறாள். இந்த செயலால் அவளது மொத்த குடும்பமும் அவளை கைவிடுகிறது. அவளது கைக்குழந்தையை வளர்க்கவும் அவர்கள் முன் வரவில்லை. ஆகவே அக்குழந்தை வாடகை தாய் மூலம் வளர கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.மகிழ்ச்சியான பிரேம்- தமிழ்ச்செல்வியின் இல்லற வாழ்வில் அப்படி என்ன நடந்தது? ஏன் தமிழ்ச்செல்வி தனது கணவனை கொலை செய்தால்? உண்மையிலேயே அந்த கொலையை அவள்தான் செய்தாளா? அவளது குழந்தையின் நிலைமை என்ன ஆனது? சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் பல திருப்பங்கள் நிறைந்த அவள் அப்படித்தான் மெகா தொடரை ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .