மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த யாமா டீசர்!!!

387

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில்
திரு. செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் திரு.சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு அவர்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். எப்போதும் தனது தனித்துவமான நடிப்பால் மக்களை கவரும் அவர் இம்முறையும் புது முயற்சி எடுத்துள்ளார். “அங்காடித் தெரு” “அசுரன் ” ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற இயக்குனர்

A.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார் மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் “யாமா” திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் ஏற்கனவே வெளியாயிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com