புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்
பத்திரிக்கைச் செய்தி
நாள் : 17.04.2021
இரங்கல் செய்தி
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரர் பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களால் சின்னக் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர். சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலராக பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளார்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.
AR Rahman::
@Actor_Vivek
can’t believe you’ve left us ..May you rest in peace ..you’ve entertained us for decades ..your legacy will stay with us
Composer Imman : My heart and soul refuses to believe the fact that our Vivek sir is no more..
Received a personal text from him last Tuesday…couldn’t really believe that he is not with us this Saturday…
What an extraordinary artist and a human we had lost..
My heartfelt condolences to his close knit family..
#RIPVivekSir
Actor YGMahendran
A wonderful actor.. A wonderful human being.. A socially aware citizen has been snatched from us. The film fraternity is totally shocked as am I on his untimely death. While alive he entertained and educated his audience. Yes this loss is irreplaceable but amidst the grief let us remember him as an Evolved Soul who played his role to perfection in this Drama of Life. My dear friend I know you will be serving the Heavens as purposefully as you did on Earth. OM SHANTHI.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
இரங்கல் செய்தி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி
நடிகர் விவேக் மறைவிற்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
” 1987ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ” மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் விவேக் அவர்கள் நடிகராக அறிமுகமானார்.
34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இன்று காலமானார்.
ஐந்துமுறை தேசிய விருதும் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை விருது மற்றும் கலைமாமணி சின்னக்கலைவாணர், ஜனங்களின் கலைஞன் உட்பட பட்டங்கள் பல பெற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக்.
தயாரிப்பாளர்களின் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் இதயத்திலும் இடம்பிடித்து பவனி வந்த விவேக் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கு மட்டுமல்ல திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
விவேக் அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.” இவ்வாறு வெளியிட்டுள்ளார்.