Vishal’s Chakra Second test preview 2 done today, So far so good. #POSITIVITY to the core.

333

விஷாலின் ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூவிற்கு நல்ல வரவேற்பு!

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நாயகனாக நடித்து எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ள ‘சக்ரா’ படத்தின் டெஸ்ட் ப்ரிவியூ எனப்படும் சோதனை முறையிலான முன் திரையீட்டுக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

இன்று இரண்டாவது நாளாக டெஸ்ட் ப்ரிவியூ திரையிடப்பட்டது. இதில் படம் பார்த்தவர்கள் தங்கள் அபிப்ராயங்கள் மூலம் பரவலான வரவேற்பை அளித்துள்ளனர்.

டெஸ்ட் ப்ரிவியூ காட்சிக்கு வருபவர்களிடம் படம் பற்றிய பின்னூட்டம் பெறுவதற்காக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் அவர்கள் ஆணா பெண்ணா? வயது, தொழில், படத்தில்
நேர்நிலை அம்சம் எது? படத்தில் உயிர்ப்போடு இருக்கும் காட்சியுள்ள பகுதி எது? எதிர்மறை அம்சம் எது? பிடிக்காத காட்சி எது? ஒட்டு மொத்த மதிப்பெண் என்ன, நட்சத்திரங்களின் எண்ணிக்கைகளில்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுப் பதில்கள் பெறப்பட்டன.
பெரும்பாலானவர்கள் நேர் நிலையான பதில்களை அளித்து தங்களது திருப்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர் .இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com