TMJA Press Meet on Sep 8th Event Stills & News

456

TMJA Press Meet Event Stills

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் Sep 8th மாலை உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந் நிகழ்வில் மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, நடிகர் ஜெய் மற்றும் சுப்பு பஞ்சு கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சுவாரஸ்யமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் பேச்சு…

சிம்பு திருமணத்திற்கு பிறகு என் திருமணம் – ஜெய்..

விஜய் சார் கிட்ட 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன் – ஜெய்

இதில் நடிகர் ஜெய் பேசும்போது பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன் என்றார். இசையமைக்க சுசீந்திரன் கேட்டுக் கொண்டதால் ,தான் இசையமைப்பாளரானதாக விரைவில் அந்த பாடல்கள் வெளியாகும் என்ற சந்தோஷத்தை பகிர்ந்தார்..

பஞ்சு சுப்பு

பஞ்சு சுப்புவிடம், ‘கசடதபற’வில் வில்லனாக நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு, “நான் வில்லனாக நடிப்பது முதல் முறையல்ல. நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ‘அரசி’ சீரியலில் கொடூர வில்லனாக நடித்திருந்தேன். அதில் நடித்தபோது, ஊரே திட்டித் தீர்த்தது. ஆனால், மக்கள் மனதில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ நின்று விட்டது. என்னைப் பொருத்தவரை இப்படித்தான் நடிப்பேன் என்பது கிடையாது. எந்த மாதிரி கதாபாத்திரமானாலும் நடிக்கத் தயார்தான்” என்றார்.

‘ஓடிடியால் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்குமா?’ என்ற கேள்விக்கு, “ஓடிடி போல் எத்தனை புதிய விஷயங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கிற அனுபவம் எதிலும் கிடைக்காது. சினிமா இருக்கும்வரை தியேட்டர்களும் இருக்கும்” என்றார்.

ஜெய் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறாரே. உங்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவீர்களா?’ என்று கேட்டதற்கு, “அப்பா எடுத்த எல்லா படங்களுக்கும் இசை இளையராஜாதான். நட்பு அன்பு காரணமாக அதை அவர் கொள்கையாகவே கடைப்பிடித்தார். இளையராஜா இல்லையென்றால் அவரது வாரிசுகள்தான் எங்கள் படங்களுக்கு இசையமைப்பார்கள். ஜெய் என் தம்பி எப்போதும் எங்கள் படங்களில் நடிக்கலாம்” என்றார்,.விரைவில் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக சொன்னார்

மாஸ்டர் பட தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ

மாஸ்டர் பட தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ பேசும் போது, மதுரையில் மிடில் கிளாஸ் குடும்பம். என் அப்பா பள்ளி ஆசிரியர். மாமியார் கணவர் எல்லாருமே கல்வி துறையில் இருந்தவர்கள். ஆனால் விஜயின் ஆரம்ப கட்ட படங்கள் சில தயாரித்தோம். பல்வேறு துறைகளில் நாங்கள் பயணிக்கிறோம் சரியான திட்டமிடல் அவசியம். பெண்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுக்கிறேன். அவரது திறமைகள் முடங்கிவிட கூடாது. அவர்கள் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். காலம் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து படம் செய்வோம். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் என் மருமகன் படத்தை தயாரித்து வருகிறோம். என்றார்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சங்கம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது . சங்க உறுப்பினர்களுக்கு பண்டிகைக்காலம் என்பதால் அரிசி போன்ற அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன . நன்றி ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் கார்த்திக்..அவர்களுக்கு

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com