“இந்தியா இன்று”
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதிய முத்திரை பதிக்கும் முக்கிய செய்தி நிகழ்ச்சியாக உருவாகியுள்ளது, “இந்தியா இன்று”. காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, நாடு முழுவதும் உள்ள முக்கிய செய்திகள் மற்றும் சம்பவங்களை விரைவாகவும் துல்லியமாகவும் கொண்டு வரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய அரசியல் மாற்றங்கள், கையொப்பமிடப்பட்ட தீர்மானங்கள், சட்டசபை விவாதங்கள், மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போன்ற முக்கிய செய்திகளை விரிவாகவும் விவரமாகவும் அறிய விரும்புவோருக்கு இந்தியா இன்று நிகழ்ச்சியே சிறந்த இடம்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய செய்திகள் மட்டுமின்றி சுவாரஸ்யமான சின்னச் சின்ன செய்திகளைக் கூட தேடிக்கோர்த்து இந்நிகழ்ச்சி வாயிலாக வழங்குகிறார்கள். சினிமாவில் பாலிவுட் தொடங்கி மல்லுவுட் வரையிலான அனைத்து திரைத்துறையின் சுவாரஸ்ய நிகழ்வுகளும் இந்தியா இன்றில் தொகுத்து வழங்கப்படுகிறது. கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட அனைத்து வித விளையாட்டுகள் குறித்தும், விளையாட்டு வீரர்கள் குறித்தும் முக்கிய நிகழ்வுகள் இங்கே சுருக்கமாக தரப்படுகிறது. இதுதவிர வணிகம், கலை, கலாச்சாரம் சார்ந்த தேசிய செய்திகள் அனைத்தும் இந்தியா இன்று நிகழ்ச்சியில் காணலாம்.