Marking a historic moment in Tamil journalism, Puthiyathalaimurai News, a YouTube channel, celebrates a milestone of 1 crore (10 million) subscribers. This milestone marks a historic achievement for the Tamil News Channel in the digital sphere.
This achievement is a testament to the high-quality journalism and engaging programming offered to viewers. Puthiyathalaimurai News has consistently provided accurate, unbiased news coverage, insightful analysis, and exclusive content.
Commenting on this success Dr. N. C. Rajamani, Chief Executive Officer, New Generation Media Corporation Pvt. Ltd., says, “We attribute this success to our audience and the continuous delivery of unbiased content. Since our establishment, we have diligently maintained an unbiased approach, focusing on measured debate, factual reporting, national pride, and upholding our credibility. Our extensive reach spans across every village, town, and city in the state, making us the most trusted news source. We are thrilled to share this achievement with you all“.
யூடியூப் சந்தாதாரர்களில் என்றும்
முதலிடத்தில் இருக்கும் புதிய தலைமுறை
ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்ஸ் என்ற சாதனையை எட்டியது!
தமிழ் செய்தி நிறுவனங்களில் இதுவரை யாருமே எட்டாத புதியதொரு சாதனையைப் படைத்திருக்கிறது புதிய தலைமுறை. ஆம், ஒரு கோடி சப்ஸ்கிரைபரர்கள். டிஜிட்டல் யுகத்தில் ஒரு கோடி என்பது எவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பது அதில் தினமும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்குத் தெரியும். அதிலும் எந்தவித சமரசங்களுமின்றி இந்த எண்ணிக்கையை சாத்தியமாக்கியிருக்கிறது புதிய தலைமுறை.
புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 13 வருடங்கள் மற்றும் டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டு 11 வருடங்கள் ஆகின்றது. தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சற்றும் ஓய்ந்துவிடாமல் ஆயிரம்கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறி வருகிறது.
உண்மை உடனுக்குடன் என்ற நோக்கில் செய்திகளில் பிழை இன்றியும், சமரசம் இன்றியும், சார்பு இன்றியும் தொடர்ந்து நடுநிலையோடு செயல்பட்டு வரும் இந்தத்த் தொலைக்காட்சி.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், டிஜிட்டல் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமான பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. K Questions, PT International, PT National, PT Digital explainers, தளபதி, World Cup 2023, எதையாவது பேசுவோம், PT Talks, The political SPYder, Pt digital voice என பிரத்யேக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இவற்றைத் தாண்டி தினசரி செய்திகள், நேர்படப் பேசு தொகுப்புகள், சிறப்பு நேர்காணல்கள், Big story, நயம்படச் சொல், குற்றம் குற்றமே, வட்டமேசை, அக்னி பரிட்சை, வீடு போன்ற தொலைக்காட்சி exclusive நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறது.
இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை, ஆசிய விளையாட்டுப்போட்டிகள், நடப்பு உலகக்கோப்பை தொடர், சந்திரயான் 3, ஆதித்யா எல்.1, கர்நாடக சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 2024 போன்ற நிகழ்வுகளில் பல்வேறு விவரங்களையும் விரிவாக ஆராய்ந்து உடனுக்குடன் வழங்கியது புதிய தலைமுறை. மேலும் மணிப்பூர் விவகாரம், ஒடிசா ரயில் விபத்து, ஆந்திர ரயில் விபத்து , இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்னை போன்றவற்றில், களத்திலிருந்தே தகவல்களை சேகரித்து பிரத்யேகமாக நேயர்களுக்கு கொடுத்தது!
தொடர்ந்து சமரசம் இன்றியும், சற்றும் சளைக்காமலும் உழைத்ததன் பலனாய் புதிய தலைமுறை யூ டியூப் தளம், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை தற்போது பெற்றுள்ளது. தமிழின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனம், டிஜிட்டலிலும் கோலோச்சி ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்ஸ் என்ற சாதனையை எட்டியதற்கு அரசியல், திரை பிரபலங்கள் உட்பட பலரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.