மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணூர் ஸ்குவாட்’.
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது.
மம்முட்டி போலீஸ் ஆபிஸராக நடித்துள்ள கண்ணூர் ஸ்குவாட், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரியல் போலீஸ் ஸ்டோரியாக ஆக்ஷனில் மிரட்டுவதாக ரசிகர்கள் டிவிட்டரில் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டாரான மம்முட்டி, ஒராண்டுக்கு 3 முதல் 4 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோர்சாச், நண்பகல் நேரத்து மயக்கம், கிறிஸ்டோபர், புழு, சிபிஐ 5 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து மம்முட்டி நடித்த ‘கண்ணூர் ஸ்குவாட்’ நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது.
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜார்ஜ் மார்ட்டின் என்ற போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் நடித்துள்ளார் மம்முட்டி. அவருடன் ரோனி டேவிட், கிஷோர், அஸீஸ் நெடுமங்காடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. அதேபோல், தற்போது கண்ணூர் ஸ்குவாட் ரிலீஸாகி, ரசிகர்களுக்கு செம்ம ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ளது.
கேரளாவின் வடக்கு பகுதியான காசர்கோடில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அதற்கான காரணத்தையும் கொலையாளிகளை தேடும் கதையாக கண்ணூர் ஸ்குவாட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மம்முட்டி, ஜார்ஜ் மார்ட்டின் என்ற அண்டர்கவர் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார். போலீஸ் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் பரபரக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக கண்ணூர் ஸ்குவாட் உருவாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ள நிலையில் ரசிகர்களின் டிவிட்டர் விமர்சனம் பாசிட்டிவாக அமைந்துள்ளது. கண்ணூர் ஸ்குவாட் தரமான திரைப்படம், திரைக்கதை, மம்முட்டியின் நடிப்பு அவுட் ஸ்டாண்டிங்காக வந்துள்ளதாக கூறயுள்ளார்.
சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை கண்ணூர் ஸ்குவாட் படத்தை சிறந்த தியேட்டர் அனுபவமாக கொடுத்துள்ளது என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம், கேரளா பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 2.40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இதுவே இந்தாண்டின் இரண்டாவது மிகச் சிறந்த கலெக்ஷன் என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பிரபல சினிமா ட்ராக்கர் ரமேஷ் பாலா டிவிட் செய்துள்ளார்.
மம்முட்டியின் கண்ணூர் ஸ்குவாட் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மல்லுவுட் திரை வட்டாரங்களும் பாராட்டியுள்ளன.
கண்ணூர் ஸ்குவாட் படத்துக்கு 3.5 ரேட்டிங் கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர், உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து தரமாக வந்துள்ளதாக பாராட்டியுள்ளார். சில காட்சிகள் சூப்பராக உள்ளதாகவும், மம்முட்டியின் நடிப்பு உட்பட பல இடங்களில் இந்தப் படம் விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமோட்டோகிராபி, பிஜிஎம் ஆகியவையும் கண்ணூர் ஸ்குவாட் படத்தின் ப்ளஸ் எனத் தெரிவித்துள்ளார்.
மம்முட்டி ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினரும் ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளனர். அதனால் ‘கண்ணூர் ஸ்குவாட்’ இந்த ஆண்டு மல்லுவுட் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.