Actor Sivakarthikeyan praises the short film ‘Enakkoru wife Venumada’.

232

சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம்

‘எனக்கொரு wife வேணுமடா’ குறும்படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

 

 

ஜியா எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள குறும்படம் ‘எனக்கொரு wife வேணுமடா’. இந்த குறும்படத்தில் செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத் ஏ.கே. எடிட்டிங். ஃபிலிம் வில்லேஜ் நிறுவனம் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். Film Dude யூடியூப் சேனலில் இந்த குறும்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேட்ரிமோனியில் திருமணத்துக்கு பெண் பார்க்கும் இளைஞன், 4 பெண்களை சந்திக்கிறான். அப்போது நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே இப்படத்தின் கதை. இதை ஹியூமர் கலந்த குறும்படமாக ஜியா எழுதி, இயக்கியுள்ளார். முதல்முறையாக அவர் இசையும் அமைத்திருக்கிறார்.

இந்த குறும்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், ‘இந்த குறும்படம் மிகவும் நன்றாக இருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது. ஹியூமர் நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. ஜியாவுக்கும் அவரது மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். இதேபோல் திரையுலகை சேர்ந்த பலரும் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com