புதுயுகம் தொலைக்காட்சியில் என்றென்றும் மெல்லிசை மன்னரும் கவியரசரும் – Write up and Images

89

தமிழ் திரை உலகின் வெற்றி பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பலர். தமிழ்  திரையுலகை ஆண்ட இரு பெரும் சிகரங்களை கொண்டாடும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சி நடத்தி இருக்கிறது.

தனது மெட்டுக்களால் இன்றளவும் ரசிகர்களை தாலாட்டிக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னரை பற்றியும் வரிகளால் வாழ்க்கை தத்துவம் அனைத்தையும் நமக்கு அளித்த கவியரசர் கண்ணதாசனை பற்றியும் புகழ் பாடும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கவியரசர் கண்ணதாசனின் புதல்வர் திரு. அண்ணாதுரை கண்ணதாசன், பாடலாசிரியர்.திரு. கலைக்குமார்,  கவியரசர் பற்றியும் மெல்லிசை மன்னரை பற்றியும் திறனாய்வு செய்த திருமதி. பானுமதி அவர்கள் மற்றும் கவியரசரோடும் மெல்லிசை மன்னரோடும் 17 ஆண்டுகளுக்கு மேல் பயணித்த அவருடைய சிஷ்யன் என்று அழைக்கப்படும் பாடகர் அனந்து ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் பாடல்களை பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர்.

திரைப்பிரபலங்கள் தங்களின் அனுபவங்களோடு தாங்கள் ரசித்த மெல்லிசை மன்னரை பற்றியும் கவியரசர் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளனர் இதில் உரையாடலோடு பல இனிமையான பாடல்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சியோடு  திவ்யா ஃபிலிம்ஸ் சொக்கலிங்கம் ஒருங்கிணைத்து இருக்கிறார்.

என்றென்றும் மெல்லிசை மன்னரும் கவியரசரும்” என்ற இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23 ஞாயிறு காலை 10 மணிக்கும்  ஜூன் 24 திங்கள் இரவு 10 மணிக்கும்,  இருவரின் பிறந்தநாள்  சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com