பாடல் இயற்றியவர் : இனியவன்
இசையமைப்பாளர்
பல்லவி
பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்
கொரோனா வந்து துரத்தியடிப்பதால் யாரையும் தொடவெண்டாம்
பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்
கொரோனா வந்து துரத்தியடிப்பதால் யாரையும் தொடவெண்டாம்
சத்தம் இல்லாமல் நீயும் எங்களை தின்றாலும்
மௌனமாகவே நீயும் வந்து கொன்றாலும்
எங்கள் இரத்தம் மண்ணில் வீழாதே
தமிழன் சத்தம் என்றும் ஓயாதே
பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்
தொடவெண்டாம் யாரையும் தொடவெண்டாம்
சரணம் 1
எங்கள் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு எப்படி வந்தாய் கொரோனா
எங்கள் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு எப்படி வந்தாய் கொரோனா
பட்ட பாடெல்லாம் பாழாய் போச்சே
என்ன பண்ணபோறோம் தெரியலையே
செத்த சாவிலே ஒன்னாகூடி
சொல்லி அழவும் வழியில்லையே
மரணம் கொடியது சாமி
மௌனம் காக்குது சாமி
தமிழா தமிழா பயம் வேண்டாம்
சாதிக்கப் பிறந்தவன் நீ
சாதியை ஒழிக்க சரித்திரம் பிறக்க
கொரோனாவை நீ விரட்டி அடி
சரணம் – 2
சதியே சதியே பயந்து நடுங்கியே கண்ணீர் வடிக்குது தேசம்
சதியே சதியே பயந்து நடுங்கியே கண்ணீர் வடிக்குது தேசம்
அண்டை நாட்டிலே எங்கள் தமிழன்
அழுது புலம்பி தவிக்கிறான்
சொந்த ஊரிலே சோறு இல்லாமல்
தூக்குப்போட்டு சாகிறான்
என்ன பாவம் நாங்கள் செய்தோம் – இனி
எங்கே போய் நாங்கள் அழுவோம்
ஒடிவிடு நீ ஓடிவிடு
கண்ணுக்கு திெயாமல் ஓடி விடு
வாழவிடு நீ வாழவிடு – எங்கள்
தேசம் காக்க வாழவிடு