சென்னையில் துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!

464

துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்னிக்கி நடந்துச்சு. .வைஸ் பிரசிடெண்ட் வெங்கய்ய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலர் கலந்துக்கிட்டாங்க. அதில் ரஜினிகாந்த். பேசியதன் சிறு துளி:.

‘ஒருத்தர் எல்லா துறையிலும் பிரபலமாவதற்கு காரணமாக இருப்பது அவரது எதிரிகள்தான், எதிர்த்தவர்களாலேயே அவர்கள் பெரிய ஆளாவார்கள். சில நேரங் களில் சில சூழ்நிலைகள் உருவாகும். அதை எப்படி கையாளுகிறார்கள் என்பது முக்கியம். அப்படி சோ-வை பெரியாளாக்கியது ரெண்டுபேர், எதிர்த்தவர்கள் ரெண்டுபேர் ஒன்று பக்தவச்சலம் மற்றொன்று கலைஞர். அப்போது பக்தவச்சலம் முதல்வர். சோ அப்போது சாதாரண நடிகர். வக்கீல், சிறு சிறு நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சம்பவாமி யுகே யுகே என்று நாடகம் போட்டார். அதில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருப்பார். அதற்கு அவர் அந்த நாடகத்தை நிறுத்தணும் என்று வழக்கு போட்டார் பக்தவச்சலம். அதை எதிர்த்து கோர்ட்டில் வாதாடி ஜெயிச்சார். சாதாரண சோ-வை அன்று பெரிய ஆளாக்கியது அப்போது பக்தவச்சலம். 1971-ல் பெரியார் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் சென்றார். அதை யாரும் பத்திரிக்கையில் போடவில்லை. சோ அதை அட்டைப் படத்தில் போட்டு கடுமையாக கண்டித்தார். அப்போ சி. எம்.மா இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவாச்சு. அதுனாலே துக்ளக் பத்திரிக்கையை சீஸ் செய்தார்கள், அதற்கு அடுத்த வாரம் மறுபடியும் துக்ளக்-கை அச்சடித்து கருப்புக்கலரில் அட்டை வெளியிட்டார் சோ. அந்த பத்திரிகை அதிக அளவில் விற்றது.

அதன் மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ அதை செய்தவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி மேனேஜர் என்று கலைஞர் படத்தை பெரிதாக போட்டார் சோ.

இன்னொரு சம்பவம் தமிழ்நாட்டுக்கு மட்டும் தெரிந்த சோ-வை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்திரா. 1975-ம் ஆண்டு மிசா இந்தியா முழுதும் அமலாச்சி. அப்போது சோ தனது பத்திரிக்கை மூலம் மிகக்கடுமையாக போராடினார். அவருக்கு எதிரான அடக்குமுறைகளால் அகில இந்திய தலைவர்களுடன் சோ-வை கொண்டுச் சேர்த்தது. அதில் வாஜ்பாய், அத்வானி, சந்திரசேகர், ராமகிருஷ்ண ஹெக்டே என பெரிய தலைவர்களிடம் நெருக்கமாக்கியது. அதற்கு வழி வகுத்தவர் இந்திரா காந்தி.

இப்படி கவலைகள் வரும் அதை நிரந்தரமாக்கிக்கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமாக்கிவிட்டால் அறிவாளி. சோ அந்த அறிவாளி. அவர் கவலைகளை தற்காலிகமாக்கிக்கொண்டார். இப்ப சோ போன்ற பத்திரிகையாளர் மிக மிக அவசியம்’

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com