
Royapuram MLA I Dream Era Murthy visited Royapuram R.S.R.M Hospital for Renovation

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காடுதலின்படி, சென்னையில் மிக முக்கிய மருத்துவ மனைகளின் ஒன்றான இராயபுரம் பகுதி மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் தாய்மார்களின் பிரசவத்திற்கு மிக உகந்த இடமான நான் பிறந்த அரசு R.S.R.M மகப்பேறு மருத்துவமனையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள், பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஆகியோருடன்
ஆய்வு மேற்கொண்டேன், பழமை வாய்ந்த கட்டிடம் என்பதாலும் மேலும் அங்கு வரும் தாய்மார்களுக்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவதுப் பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினோம், உடன்
மருத்துவர்கள், மாநகராட்சி, பொதுப்பணித்துறை,
குடிநீர் வடிகால் வாரிய ஆகிய துறை அதிகாரிகள் மற்றும் பகுதிச் செயலாளர்கள்
திரு. வ.பெ.சுரேஷ், இரா.செந்தில்குமார், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் இருந்தனர். நன்றி!
அன்புடன்
ஐட்ரீம் இரா.மூர்த்தி
இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்