Tamil Producer Sangam Leader Tamizh Kumaran Meets Deputy CM Udayanithi

558

 

அண்மையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர் திரு.தமிழ் குமரன் அவர்கள் தலைமையில், புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவர்கள் தலைமையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் திரு. மணிகண்டன் (MJD Production) அவர்கள் சங்கத்திற்கு ரூபாய். பத்து லட்சம் (Rs.10,00,000/-) நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் தலைவர் திரு. GKM தமிழ்குமரன் அவர்களுடன், துணைத் தலைவர் திரு.ஆர்.கே. சுரேஷ், செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், பொருளாளர் திரு.சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி.சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறப்பான இந்த தொடக்கத்திற்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com