Super Good Films RB Choudary presents A Santhosh Rajan Directorial Jiiva starrer “Varalaru Mukkiyam”
Actor Jiiva and Rom-Coms have been inseparable terms as the actor’s success graph with this genre has been phenomenal. While the exemplifications like Siva Manasula Sakthi and many more projects runs into a long queue, the actor is all set to grab the attention of crowds with the latest Rom-Com titled ‘Varalaru Mukkiyam’. The film is written and directed by debutant Santhosh Rajan, , and is produced by Super Good Films RB Choudary.
While Kashmira Pardeshi (Sivappu Manjal Pacchai fame) plays the female lead role, the others in the star-cast are Pragya Nagara, Viji Rathish, VTV Ganesh, KS Ravikumar, Malayalam actor Siddiq, Saranya Ponvannan, Shara, TSK, E Ramados, Lollu Sabha Swaminathan, Motta Rajendhiran, Lollu Saba Manohar, Kaali Rajkumar, Aadhirai and few more prominent actors.
Written and directed by Santhosh Rajan, the film has cinematography handled by Sakthi Saravanan, musical score by ‘Jimikki Kamal’ song fame Shaan Rahman. The other technicians in the film are Srikanth KB (Editing), Raju Sundaram-Brindha (Choreography), Madhan Karky, Santhosh Rajan (Lyric writers), R. Sakthi Saravanan (Stunt Direction), Mohan (Art), Vasuki Bhaskar (Costume Designing), S.A. Shanmugam (Makeup), P.R. Ganesh (Costumer), Stills Anbu (Stills), K.G. Ramakrishnan (Co-Director) and Suresh Chandra (PRO).
The film has been shot across the locales of Chennai, Coimbatore, Hyderabad and Kerala. While the shooting has been already completed, the postproduction work is now proceeding at brisk pace. The official announcement pertaining to the film’s trailer, audio and worldwide theatrical release will be made soon.
Super Good Films RB சௌத்திரி வழங்கும்,
இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில்,
ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்”
நடிகர் ஜீவாவும் அவரின் ரோம்-காம் படங்களும் பிரிக்க முடியாதவை. திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தில் ரோம்-காம் படங்களுக்கென்று ஒரு தனித்துவமான இடமுண்டு. ‘சிவா மனசுல சக்தி’ போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்கள் தாண்டி இன்னும் எண்ணற்ற திரைப்படங்கள் நீளும் இந்த வரிசையில், தற்போது ஜீவா மீண்டும் ‘வரலாறு முக்கியம்’ என்ற ரோம்-காம் படம் மூலம் ரசிகர் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்திரி தயாரிக்கிறார்.
நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் NB (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), R. சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு ), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.
சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.