நடிகர் லாரன்ஸ் நல்ல செயல்களால் தனது கரத்தையும் அறத்தையும் வலுப்படுத்திக் கொண்டே வருகிறார். சமீபத்தில் அவர் செய்துள்ள ஒரு நற்செயல் சேவை மீதான மதிப்பை கூட்டி இருக்கிறது
உடன் இருப்பவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்து மகிழ்வதில் லாரன்ஸுக்கு நிகர் அவரே..தன்னிடம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடனக் கலைஞராகவும் தனது ட்ரஸ்டிலும் இருந்து வந்த ராஜகோபால் என்பவருக்கு ஆபரேசன் செய்ய வேண்டிய அளவிற்கு உடலில் பாதிப்பு. விசயம் அறிந்த லாரன்ஸ் ஓடோடிச் சென்று சென்னை காவேரி மருத்துவமனையில் உயர்ரக சிகைச்சைப் பிரிவில் அவரை அட்மிட் செய்ததோடு ஆபரேசனுக்கு ஆன மொத்தச் செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். “நம்ம கூட இருக்குறவங்களை நம்ம நல்லா பார்த்துக்கிட்டா நம்மை மேல இருக்குறவன் நல்லாப் பார்த்துப்பான்” என்று தல அஜித் பேசிய வசனம் மாஸ்டருக்குப் பொருந்தும்