Puthuyugam Tv – Pet Dog debate show

159
“ஷாட் பூட் த்ரீ”
சிறப்பு விவாத நிகழ்ச்சி

 

 

அன்றாட வாழ்வில் ஒன்றாகிவிட்ட செல்ல வளர்ப்பு நாய்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விவாதம் “ஷாட்  பூட்  த்ரீ”. நாய்கள் நமக்கு சவாலா? காவலா? என்ற தலைப்பில் சிறப்பு விவாத நிகழ்ச்சி.மனித நேயத்தை பற்றியும் விலங்குகளின் மீது நாம் வைத்திருக்க வேண்டிய நேயத்தை பற்றியும் விரிவாக விளக்குகிறது.

ஷாட்  பூட்  த்ரீ.. திரைப்படம் பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் அருணாச்சல வைத்தியநாதன் ,ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் நடிகர் ராகவ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களோடு நாய் வளர்ப்பு பற்றி விவாதிப்பதற்காக செல்ல நாய்களை வளர்ப்போர் இந்த சிறப்பு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாய்கள் குறித்து தங்களுடைய பார்வையை எடுத்துரைக்கின்றனர் .இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று காலை 11:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை அருள்மொழி தொகுத்து வழங்குகிறார் .

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com