புது வடிவம் பெற்ற புதியதலைமுறையின்
“புதுப்புது அர்த்தங்கள்”
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணிக்கு புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மக்களின் அபிமானம் பெற்ற இந்த நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் இப்போது ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் 3 பகுதிகள் உள்ளன . முதலில் புதிய கோணம். இந்த பகுதியில் தினசரி நாளிதழ்களில் வரும் நடுப்பக்க கட்டுரைகள் எடுக்கப்பட்டு விருந்தினர் ஒருவருடன் விவாதிக்கப்படும்.
இரண்டாவது பகுதி செய்திக்கு அப்பால் இந்த பகுதியில் அன்றாட பத்திரிகைகளில் வெளியாகும் முக்கியமான தலையங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மையக்கருத்து தொகுப்பாளரால் விளக்கப்படுகிறது.
இது தவிர உலகம் இன்று என்கிற மூன்றாவதாக பெயரில் புதிய பகுதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அந்தந்த நாட்டின் முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் இணையதள பத்திரிகைகளில் வெளியாகும் சுவாரஸ்யமான, ஆச்சரியமான, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுருக்கமான வகையில் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் பிரதான நெறியாளர்கள் கார்த்திகேயன், விஜயன், ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்