On the occasion of ‘Yogi’ turning 13, Yogi Babu celebrated in a simple way by cutting a cake on the set of Suriya’s new film directed by ‘Siruthai’ Siva.
‘யோகி’ படம் திரைக்கு வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத்தளத்தில், கேக் வெட்டி எளிய முறையில் கொண்டாடினார் யோகி பாபு. மேலும் தன்னை இவ்வளவு தூரம் கொண்டு சேர்த்த திரைத்துறையினர் மற்றும் மீடியாக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தன்னை ‘யோகி’ படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, இப்படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோருக்கும், சின்ன திரையில் ஆரம்பகாலத்தில் கிட்ட தட்ட 6 ஆண்டுகள் தன் திறமைகளை வெளி கொண்டு வந்த இயக்குனர் ராம் பாலா அவர்களுக்கும், தனக்கு வழிகாட்டியாக இருந்த இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் இந்த நேரத்தில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் யோகி பாபு.