நாட்படு தேறல் – தலைப்புப் பாடல் கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்

54
Header Aside Logo

நாட்படு தேறல் – தலைப்புப் பாடல்

கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்

கவிஞர் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாட்டு உலகின் முதல் முயற்சி என்று பேசப்படுகிறது. 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் –
100 இயக்குநர்கள் என்ற திட்டத்தோடு 100 பாடல்களைக் கவிஞர் வைரமுத்து உருவாக்கி வருகிறார்.

தொலைக்காட்சி சீரியல்களைப் போல இது வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் பாட்டுத் தொடராகும். ஏப்ரல் 18 முதல் ஒவ்வொரு ஞாயிறும் கலைஞர் தொலைக்காட்சி – இசையருவி இரண்டிலும் நாட்படு தேறல் ஒளிபரப்பாகிறது. அதன் தலைப்புப் பாடலைக் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் – பேஸ்புக் – இன்ஸ்டாகிராம் – யூ டியூப் தளங்கங்களில் இன்று வெளியிட்டார். வெளிட்ட சிலமணி நேரங்களில் அது தீப்பிடித்ததுபோல் தீவிரமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

நாட்படு தேறல் என்ற தலைப்பின் இலக்கியப் பாடலாக இது ஒலிக்கிறது. ஜெரார்ட் பெலிக்ஸ் இசையில், சங்கர் மகாதேவன் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கார்த்திகேயன் திரையாக்கம் செய்திருக்கிறார்.

“இதிகாசத்தில் விழுந்த ரத்தம்
நாட்படு தேறல்

இலக்கியத்தில் வடிந்த கண்ணீர்
நாட்படு தேறல்

அமிழ்தில் ஊறிய ஆதித் தமிழும்
நாட்படு தேறல்”

என்ற வரிகளைத் தமிழ் ஆர்வலர்கள் ரசித்துக் கொண்டாடுகிறார்கள்.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com