பொதுவாக கவுண்டமணி தனது குடும்பத்தை பற்றியோ வாரிசுகளின் புகைப்படங்களையோ வெளியுலகத்திற்கு காட்டியது இல்லை.
அது ஒருபுறமிருக்கட்டும். சென்னை அடையாறு அரசு புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி ஒவ்வொரு மாதமும் உதவி வருகிறது.
இதுவரை அவர்கள் யார் என்கிற விபரம் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது.இப்போது அவர்கள் யார் அவர்கள் என்பது தெரிய வந்து காப்பகத்தில் இருப்பவர்களே நெகிழ்ந்து விட்டனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுவது நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ரா, அவரது கணவர் வெங்கடாசலம். இருவரும் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு உதவி வந்திருக்கிறார்கள்.