‘#AS23’ – Ashok Selvan’s New Movie Launch Event Stills & News

69

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘#AS23

ஹாப்பி ஹை பிக்சர்ஸின் ( Happy High Pictures) இரண்டாவது படமான ‘#AS23’ –  பூஜையுடன் தொடக்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் ‘#AS23 ‘ எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா  பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற  திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ்  ( Happy High Pictures) சார்பில் தயாரிப்பாளர்கள் அஷோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், ‘போர் தொழில்’  பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும், ‘#AS23 ‘ படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com