Spatial Audio driving content consumption on on-the-go devices amongst consumers in India, reveals CMR Study 2022

227

 

  • Audio quality remains the top-most priority for consumers while selecting their smartphone and other on-the-go devices.
  • Four in every five consumers said better sound and picture quality would increase their video content consumption.
  • Five in every six users feel Dolby Atmos/Dolby Vision would enhance their consumption of mobile entertainment.
  • Seven in every eight users agree that Dolby Atmos/Dolby Vision would lead them to decide their music / video service subscription.

 

CHENNAI: Immersive audio experiences have gained importance over the pandemic years for consumers on smartphones and other ‘on-the-go devices’, including tablets, and hearables. Amongst Digital Natives, essentially tech-aware users spending >20 hours online on content consumption, there has been an impressive double-digit growth of 11% in seeking premium spatial audio over the past three years. These research insights are from the third edition of an extensive annual consumer study on the ‘Importance of Audio among Smartphone Users’, commissioned by Dolby, chronicling changing consumer behaviour around content creation, consumption and engagement with on-the-go devices.

As identified in study, audio quality continues to be the top-most driver (Score 71 out of 100) influencing consumer smartphone purchases, ahead of battery (Score 67 out of 100) and camera (Score 62 out of 100). Since the inaugural CMR Survey in 2020, there has been a continuous ongoing spike amongst consumers prioritizing audio as a key smartphone purchase driver. The importance score on audio quality has increased by 8% between 2020 and 2022.

இந்தியாவில் உள்ள நுகர்வோர் மத்தியில், கையடக்க சாதனங்களில் கன்டென்ட் நுகர்வை ‘ஸ்பேஷியல் ஆடியோ’ அதிகரித்துள்ளதாக CMR ஆய்வு 2022-இல் தெரியவந்துள்ளது

 

  • நுகர்வோர் தங்களது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கையடக்க சாதனைகளை தேர்வு செய்கையில், தரமான ஆடியோ என்பதே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விஷயமாக உள்ளது.
  • ஐந்தில் நான்கு நுகர்வோர், சிறந்த ஒலி மற்றும் காட்சித் தரம் ஆகியன வீடியோ கன்டென்ட் நுகர்வை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
  • ஆறில் ஐந்து பயன்பாட்டாளர்கள், டால்பி அட்மாஸ்/ டால்பி விஷன் ஆகியவை மொபைல் பொழுதுபோக்கின் நுகர்வை மேம்படுத்துவதாக உணர்கின்றனர்.
  • எட்டில் ஏழு பயன்பாட்டாளர்கள், மியூசிக் / வீடியோ சேவைக்கான சந்தாவை தேர்வு செய்வதற்கு டால்பி அட்மாஸ்/ டால்பி விஷன் ஆகியவை அடிப்படையாக உள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சென்னை: டேப்லெட்கள், ஹியரபில் ஆடியோ சாதனங்கள் உள்ளிட்ட கையடக்க சாதனங்கள் (on-the-go-devices) மற்றும் ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றில், பெருந்தொற்று ஏற்பட்ட ஆண்டுகளில் ‘காட்சிகளுக்குள் இட்டுச்செல்லும் ஆடியோ’ அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது அதிகரித்துள்ளது. டிஜிட்டல் தரப்பினர் மத்தியில், குறிப்பாக தொழில்நுட்பம்-அறிந்த பயன்பாட்டாளர்கள் 20 மணிநேரத்திற்கும் அதிகமான நேரத்தை கன்டென்ட் நுகர்விற்காக ஆன்லைனில் செலவிடுகிறார்கள்; வியக்கத்தக்க வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் ப்ரீமியம் ஸ்பேஷியல் ஆடியோவிற்கான நாட்டம் 11% என்கிற இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ‘ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர் மத்தியில் ஆடியோவின் முக்கியத்துவம்’, என்பது பற்றி டால்பி நடத்திய விரிவான வருடாந்திர நுகர்வோர் ஆய்வின் மூன்றாம் பதிப்பிலிருந்து – கன்டென்ட் உருவாக்கம், நுகர்வு மற்றும் கையடக்க சாதனங்களில் அவை ஈடுபடுத்தப்படும் விதங்களில் நுகர்வோரின் போக்கு எப்படி மாறிவருகிறது  என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்களின்படி, பேட்டரி மதிப்பீடான (100-க்கு 67) மற்றும் கேமரா மதிப்பீடான (100-க்கு 62) ஆகியவற்றை விட ஆடியோவின் தரமே (100-க்கு 71) மதிப்பீடைப் பெற்று, நுகர்வோர் ஸ்மார்ட்போன் வாங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்  காரணியாக தொடர்கிறது. 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் CMR கணக்கெடுப்பில் துவங்கி, தற்போது வரை நுகர்வோர் மத்தியில் ஸ்மார்ட்போன் வாங்குவதில் ஒரு முதன்மையான காரணியாக ‘ஆடியோ’ தொடர்ச்சியாக நீடிக்கிறது. 2020 மற்றும் 2022-க்கு ஆண்டு இடைவெளியில் ஆடியோ தரத்திற்கான முக்கியத்துவம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சைபர்மீடியா ரிசர்ச் (CMR) நிறுவனத்தின், ஹெட்-இண்டஸ்ட்ரி இன்டெலிஜென்ஸ் குரூப், திரு. பிரபு ராம் அவர்கள் இதுபற்றி பேசுகையில், “இசை, திரைப்படங்கள், நேரலை விளையாட்டுகள் மற்றும் மொபைல் கேமிங் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளின் காரணமாக, தங்கள் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, கையடக்க சாதனங்களிலும் நுகர்வோர் அதிக அளவில் ‘பிரீமியம் ஆடியோ அனுபவத்தினை’ நாடத் துவங்கினர். ஸ்பேஷியல் ஆடியோவுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான கன்டென்ட்களில் மூழ்கி ரசிக்கும் அனுபவங்களையும், விவரங்களையும் தேடுகின்றனர். டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி விஷன் போன்ற தொழில்துறையின் முன்னணி கண்டுபிடிப்புகளால் இத்தேவைகளை பூர்த்தி செய்வது  சாத்தியமாகியுள்ளது,” என்று தெரிவித்தார்.

 ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கியத் தகவல்கள்:

  • கையடக்க சாதனங்களில் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட தரமான ஆடியோ உள்ளது
    • கையடக்க சாதங்களை வாங்கச் செய்யும் முதன்மையான காரணியாக ஆடியோவின் தரம் உள்ளது.
    • இசை கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் OTT நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஆகியவையே ஸ்மார்ட்போனில் ஆடியோ/வீடியோவைப் பயன்படுத்துவதற்கான முதல் மூன்று வழிகளாக உள்ளன. சுவாரஸ்யமாக, ஆடியோ அழைப்புகளில் – வாட்ஸ்அப் பயன்பாடு 41% வளர்ச்சியைக் கண்டுள்ளது, 2020-இல் வெறும் 38% சதவிதமாக இருந்த இது, 2022-இல் 79% சதவீதமாக உயர்ந்துள்ளது.
    • ஆடியோ புத்தகங்களைக் கேட்கும் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது, அதில் பயன்பாட்டாளர் பெரும்பாலும் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
    • ஆடியோ அல்லது வீடியோ கன்டென்ட் நுகர்வில் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மிகவும் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் துணை-சாதனமாகத் தொடர்ந்து நீடிக்கிறது. 2021-ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு ஸ்மார்ட்போனுக்கான துணை-சாதனப் பயன்பாடு அதிகரித்துள்ளது; அதில் நுகர்வோரின் முதன்மையான தேவையாக ‘தெளிவான குரல்’ (64%) உள்ளது.
  • அதிகரித்து வரும் கன்டென்ட் படைப்பாளர்கள்
    • கடந்த மூன்று ஆண்டுகளில், வீடியோக்கள் மற்றும் ஆடியோ உட்பட கன்டென்ட்களை உருவாக்கும் நேரமானது, சுமார் 10% அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்கள், சராசரியாக, ஒரு வாரத்தில் சுமார் 4 முதல் 5 மணிநேர கன்டென்ட்டை உருவாக்குகிறார்கள்.
    • ஐந்தில் நான்கு ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள், டால்பி விஷன் அம்சமுள்ள ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வீடியோக்களை படமாக்குவதில் விருப்பம் காண்பித்துள்ளனர்.
  • நுகர்வோரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி விஷன்
    • டால்பி அட்மாஸ் கன்டென்ட்டில் இருந்தால், ஆறில் ஐந்து பயன்பாட்டாளர்கள் (84%) கன்டென்ட்டுடன் சிறந்த பிணைப்பை உணர்வதாக தெரிவித்துள்ளனர். டால்பி அட்மோஸின் மல்டி-டைமென்ஷனல் ஒலி அனுபவத்தின் காரணமாக, 2021-ல் இருந்து 5% அதிகரித்துள்ளது.
    • ஆறில் ஐந்து பயன்பாட்டாளர்கள் (84%), கடந்த மூன்று ஆண்டுகளில் டால்பி அட்மாஸ்/ டால்பி விஷன் ஆகியவை மொபைல் பொழுதுபோக்கின் நுகர்வை மேம்படுத்துவதாக உணர்கின்றனர்.
    • டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி விஷன் மூலம் நுகர்வோர் ரசிக்க விரும்பும் முதல் மூன்று கன்டென்ட்களாக திரைப்படங்கள், இசை மற்றும் எபிசோடிக் கன்டென்ட் ஆகியவை உள்ளன. கடந்த மூன்று வருட ஆய்வு கண்டுபிடிப்புகளின்படி, திரைப்படங்களே இந்தியர்களின் விருப்பத்தேர்வாக உள்ளன.
    • எட்டில் ஏழு பயன்பாட்டாளர்கள், கன்டென்ட் சேவைக்கான சந்தாவை தேர்வு செய்வதற்கு டால்பி அட்மாஸ்/ டால்பி விஷன் ஆகியவையே காரணியாக உள்ளதாக நம்புகின்றனர்.

 

தொகுப்பாளர்களுக்கான குறிப்பு:

முன்னணி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான சைபர்மீடியா ரிசர்ச் (CMR), “ஆடியோ & வீடியோ கன்ஸ்ம்ப்ஷன் ஆன், ‘ஆன்-தி-கோ-டிவைசஸ்’ இந்தியா” என்ற தலைப்பில் கையடக்க சாதனங்களில் மேற்கொள்ளப்படும் ஆடியோ & வீடியோ நுகர்வு பற்றிய இந்திய நுகர்வோர் கணக்கெடுப்பின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டது. இந்த ஆய்வானது 18-40 வயதுக்குட்பட்டடோர், SEC A மற்றும் B பிரிவினரை உள்ளடக்கிய 2,344 நுகர்வோரின் கருத்துக்களாகும்.

இந்தியாவின் எல்லா பகுதிகளையும் உட்படுத்தும் வகையில் புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், மதுரை, ராஜ்கோட், புவனேஷ்வர் மற்றும் ஜலந்தர் ஆகிய எட்டு நகரங்களில் உட்பட, 1-ஆம் நிலை மற்றும் 2-ஆம் நிலை நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இவை தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்ட முடிவுகள் என்பதால், மொத்த மக்கள்தொகையுடன் கணக்கெடுக்கப்பட்டால் கிடைக்கும் முடிவுகளின் புள்ளியியல் துல்லியத்தன்மை – இதிலிருந்து 3% கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் என்பதில் 95% நம்பகத்தன்மை உள்ளது.

About CMR:

CMR offers industry intelligence, consulting and marketing services, including but not limited to market tracking, market sizing, stakeholder satisfaction, analytics and opportunity assessment studies. CMR’s core value proposition encompasses a rich portfolio of syndicated reports and custom research capabilities across multiple industries, markets and geographies. A part of CyberMedia, South Asia’s largest specialty media and media services group, CyberMedia Research (CMR) has been a front-runner in market research, consulting and advisory services since 1986.

For queries, please contact

Sugandha Srivastava

Manager-Research

CyberMedia Research (CMR)

ssrivastava@cmrindia.com

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com