ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6:00 மணிக்கு ‘அருள் நேரம்‘ என்ற பக்தி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில், ‘அர்த்தமுள்ள ஆன்மீகம்‘ பகுதியில், நாம் தினம்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகள் பற்றி நேயர்களின் சந்தேகங்களுக்கு திரு.ஹரிபிரசாத் ஷர்மா விளக்கமளிக்கிறார்.
‘ஆனந்த ஆரம்பம்‘ பகுதியில் ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகளை குட்டிக்கதைகள் வாயிலாகவும், குறிப்புகள் மூலமாகவும் அறியதருகிறார் பேச்சாளர் திரு.மணிகண்டன்.
சித்தர்கள் வரலாற்றையும், அவர்கள் ஆற்றிய அற்புதங்களையும் ‘குருவே சரணம்‘ பகுதி வாயிலாக நமக்கு தொகுத்து வழங்குகிறார் திரு.பி.சுவாமிநாதன்.
அதோடு, பிரசித்தி பெற்ற திருக்கோயில்களின் தல வரலாற்றையும், ஆன்மீக சிறப்புகளையும் ‘ஆலயம் செல்வோம்‘ என்ற பகுதியில் இடம்பெற செய்கின்றனர்.