
திரைத்துறை பணி களுக்கு அனுமதி அளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு நடிகரும், இயக்குநருமான ரவி மரியா நன்றி தெரிவித்தார்.
தமிழ் திரைத்துறையில் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிற
கொரானா வைரஸ் தாக்கத்தினால் இந்தியா முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திரைத்துறைக்கும் அது அறிவிக்கப்பட்டது.
இதனால் தினமும் வேலைக்கு சென்று கூலி வாங்கும் 25,000 திரைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டனர். திரைத் தொழில் என்பது சினிமாவை நேசிப்பவர்களால் மட்டுமே செய்யப்படக் கூடியது. அதனால் இந்த திரைத்தொழிலியே இருந்தவர்களுக்கு வேறு தொழில் தெரியாது. இப்படி இந்த தொழிலில் முன்னணி நடிகர், நடிகைகளை தவிர்த்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், டப்பிங் ஒலிப்பதிவாளர்கள் , கிரேன் தொழிலாளர்கள், லைட்மேன்கள், பெயிண்டர்கள், தச்சு வேலை செய்பவர்கள், படப்பிடிப்பிற்கு சாப்பாடு சப்ளை செய்யும் தொழிலாளர்கள், மேக்கப் தொழிலாளர்கள், ஒப்பனை, மற்றும் உடையலங்காரத்தில் பணிபுரிபவர்கள், சினிமா மக்கள் தொடர்பாளர்கள், புரொடக்சன் மேனேஜர்கள்,படத் தொகுப்பாளர்கள், ஸ்பெஷல் சவுண்ட் எபெக்ட்டில் பணிபுரிபவர்கள், கம்யூட்டர் கிராபிக்ஸ் செய்யக் கூடியவர்கள் இப்படி ஏராளமான தொழிலாளர்கள் இந்த திரைத்துறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் 50 நாட்களை நெருங்கும் கொரானா ஊரடங்கால் தொழில் செய்ய முடியாமல், வருவாய் ஈட்ட முடியாமல் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாயினர்.
மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களாகட்டும், அவர் வழியில் வந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களாகட்டும் சினிமாத்துறையின் மேல் எப்போதும் அக்கறை வைத்திருந்தனர். அவர்களின் வழியில் வந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் புரட்சித்தலைவரைப் போல், புரட்சித் தலைவியைப் போல் சினிமாத்துறையின் மீது மிகுந்த அக்கறை வைத்து சினிமா துறையில் உள்ள நல வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் ரூ 1000 நிதியுதவியை கொரொனா நிவாரணமாக வழங்கினார். அத்தோடு நின்றுவிடாமல் கொரானாவால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட சினிமாத்துறை பணிகளை மீண்டும் துவங்கவேண்டும் என சினிமாத்துறையினர் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகளை தாயுள்ளத்தோடு ஏற்றுக் கொண்டு வருகிற 11ந் தேதி முதல் படப்பிடிப்பிற்கு பின்னால் உள்ள எடிட்டிங், டப்பிங், விஷுவல் எபெக்ட், மிக்ஸிங், போன்ற பணிகளை செய்து கொள்ளலாம் என அரசாணை பிறப்பித்து உள்ளார்.
இந்த அறிவிப்பால் பல நூறு கோடிகளை முதலீடு செய்துள்ளதயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர். திரைத்துறையினரின் கோரிக்கையை உடனே ஏற்று திரைப்பணிகளை முடுக்கி விட்ட நமது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், எங்களது கோரிக்கையினை முதல்வரிடம் எடுத்துக் கூறி ஆவண செய்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜீ அவர்களுக்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு நடிகரும், இயக்குநருமான எஸ். ரவி மரியா தெரிவித்தார்