First Look of ‘Lock’ gets phenomenal reception

132
Header Aside Logo

 

“Lock” is crafted and is getting materialized as an out-and-out psychological thriller on par with Hollywood standards.

‘Attu’ movie fame filmmaker Rathan Linga’s next directorial ‘Lock’ First Look creates sensational impact. Written and directed by Rathan Linga, the movie is produced by Bamboo Trees Cinemas, RPG Royal Phnompenh Groups, and Sakthivel Pictures at a whopping budget.

Every person on this planet has a dream and never ceases to walk away from that lane that leads them to accomplish it. Few are lucky to have their dreams come true. For a few, they achieve it partially, and there are misfortunate ones whose dreams remain unfulfilled till the end. It’s our responsibility to discern the good and bad people, for only we can save ourselves from every evil in this world. In case of not doing so, we have to face the consequences. This is the core theme of “Lock”.

Social miscreants and evil spirits always hamper the dreams, which are adored as flowers by many. This dream flower gets trampled and decomposed even before it becomes a reality.

The story revolves around five psychotic-lustful murderers infiltrating the city. They cannot stop craving for a beautiful girl Julie and want to quench their lustful thirst from her. Does Julie escape from the cruel hands of these beasts? What happens to the psycho killers? It forms the crux of the ‘Lock’ story laced with unexpected twists, turns, and surprising events.

Sudhir plays the protagonist. Madhu performs the female lead character, and Harini is the second heroine. The others in the star cast include Bharathi, Srinivasa Varadhan, and a few more familiar actors. These actors have already been appreciated for their groovy performances in their previous movies.

Rathan Linga, director of this film has already grabbed everyone’s attention for his previous directorial outing titled ‘Attu’. Lock features cinematography by Nandha, musical score by Vikram Selva, and editing by Mahendran Ganesan.

Lock is a full-length psychological thriller that will keep the audience at the edge of their seats from beginning till the end for its unexpected twists and turns laced with surprise elements.

The movie is all set for its release soon, thereby endowing audiences with a gripping experience.

The first look of Lock unveiled today has created a tremendous lease of expectations, and is garnering good appreciation.

லாக்’ படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி பரபரப்பானது!

ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘லாக்’

‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான ‘லாக் ‘ படத்தின் பஸ்ட் லுக் இன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா . பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , RPG ராயல் பினோபென் குழு , சக்திவேல் பிக்சர்ஸ், ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ லாக்’ திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளன.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள் .சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.

இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா ?கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
இல்லாவிட்டால் அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுவே ‘லாக் ‘ படத்தின் கரு.

சமூக விரோதிகளும் தீயசக்திகளும் மனிதர்களின் கனவில் கனலை மூட்டி விடுகிறார்கள். கனவு பூவாக மலரும் முன்பே மிதித்துச் சிதைத்து விடுகிறார்கள்.

அந்த நகரத்தில் சைக்கோ காமக் கொடூர கொலைகாரர்கள் ஐந்து பேர் ஊடுருவுகிறார்கள். அடுத்து தங்கள் காமப்பசிக்காக ஜூலி மீது கண் வைக்கிறார்கள். மிருகங்களின் கொடூர கரங்களிலிருந்து எப்படி ஜூலி தப்பிக்கிறாள்? சைக்கோ கொலையாளிகள் என்ன ஆனார்கள்? என்பதைப் பரபரப்பாக சொல்லும் படம்தான் லாக்.

அடுத்தடுத்து முடிச்சுகள்,
திருப்பங்கள் எனக் கதை நகர்கிறது. இப்படி ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படமாக லாக் உருவாகியுள்ளது

இப் படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்குமே ஏற்கெனவே சில படங்களில் தோன்றிய அனுபவம் உண்டு.

இப்படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா ஏற்கெனவே ‘அட்டு’ என்ற படத்தை இயக்கி,அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். ஒளிப்பதிவு – நந்தா ,இசை -விக்ரம் செல்வா ,எடிட்டிங் – மகேந்திரன் கணேசன்.

ஒரு முழுநீள விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லராகவும்
படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியில் லாக் செய்து விடும் அளவுக்குத் திகிலும் திருப்பங்களும் கொண்ட படமாகவும் ‘ லாக் ‘ உருவாகியிருக்கிறது .

விரைவில் விறு விறு திரை அனுபவத்துக்கு ரசிகர்களை அழைத்துச் சென்று வியக்க வைக்க வருகிறது ‘லாக்’.

இன்று இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .’லாக்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com