Tamil Nadu Minister for Health and Family Welfare Ma. Subramanian honoured the six Chess Champions and the three Chess coaches of Velammal

90

Tamil Nadu Minister for Health and Family Welfare Ma. Subramanian
honoured the six Chess Champions and the three Chess coaches of Velammal, who
are taking part at the 44th FIDE Chess Olympiad scheduled to be held at
Mamallapuram in Chengalpat district from July 28 to August 10 with a prize amount
of Rs 30 lakh at a felicitation event held at the school premises.

@VelammalNexus @velmohan5 @aravindjayabal @DoneChannel1 #ChessOlympiad2022 #ChessChampions

   ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ்சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சிரூ.30 லட்சம்பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழாஅமைச்சர்மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

    44 –வதுசெஸ் ஒலிம்பியாட்போட்டிகளில் இந்தியா சார்பில்பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களைகவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி பிரமாண்டமான முறையில்நடைபெற்றது. மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதுடன், வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பள்ளியின்சார்பில் வழங்கப்பட்ட ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை வழங்கிசிறப்பித்தார்.   

              இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சர்வதேசஅளவிலான 44 –வதுசெஸ் ஒலிம்பியாட்சதுரங்க போட்டிகள்வருகிற ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரைநடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செஸ்ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது. 188 நாடுகளைசேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் செஸ்ஒல்ம்பியாட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனர். 

    இந்த போட்டியில் இந்தியா சார்பில் உலக செஸ்சாம்பியன்களான அதிபன் பாஸ்கரன், எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன் முரளி, வைஷாலி, பிரக்யானந்தா, குகேஷ் ஆகியோர்பங்கேற்று விளையாட உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில்இந்தியாவின் முகங்களாக இருக்கும் இந்த ஆறு மாணவர்களும்  ென்னை வேலம்மாள் நெக்சஸ் பள்ளியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர செஸ்ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக இந்தியாசார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நாராயண் ஸ்ரீநாத், ஷியாம் சுந்தர்மற்றும் பிரேசில் சார்பில் பிரியதர்ஷன் ஆகிய மூவரும் வேலம்மாள்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். இது தவிர அண்மையில்துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில்வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ரிந்தியா, பிரணவ், சவிதா ஸ்ரீ, தேஜஸ்வினி, மிருத்தியுஞ்சய், வி.எல்.சந்தோஷ், மிதுன் பிரணவ்உள்ளிட்ட வீரர் தங்கம் வென்று அசத்தினர்

   இந்நிலையில், 44–வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில்பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் உலக செஸ்சாம்பியன்களையும், துபாயில் நடைபெற்ற உலக செஸ்சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற வேலம்மாள் பள்ளிமாணவர்களையும் கவுரவிக்கும் நிகழ்ச்சியானது ஆலப்பாக்கத்தில்உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒலிம்பியாட்  பயிற்சியாளர்கள் நாராயண் ஸ்ரீநாத், ஷியாம் சுந்தர், பிரியதர்ஷன்மற்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பயிற்சியாளர் வேலவன்ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். தமிழக சுகாதாரத்குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த நிகழ்சிக்குதலைமை தாங்கியதுடன், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில்பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் உலக செஸ் சாம்பியன்களையும்துபாயில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கிசிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, 44 –வதுசெஸ் ஒலிம்பியாட் இயக்குனரும், அகில இந்திய செஸ்கூட்டமைப்பின் செயலாளருமான பாரத் சிங் சவுகான் பங்கேற்றார்.சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காரம்பாக்கம்எம்.எல்..கணபதி, தொழிலதிபர் குமரவேல், பவன் சைபர்டாக்தலைமை அதிகாரி மைக் முரளிதரன், சென்னை மாவட்ட செஸ்கூட்டமைப்பின் செயலாளர் கணேசன், செஸ் பயிற்சியாளர் ரமேஷ்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலம்மாள  கல்விக்குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மாணவர்களைஊக்கவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைபிரமாண்டமான முறையில் செய்திருந்தார்.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com