தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!
Dhanush Birthday Celebrations
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தாம்பரம் தி மு க .MLA S.R ராஜா அவர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை துவக்கிவைத்தார் .
ஊனமுற்றோர் 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் , 500 மேற்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 மாதத்திற்கு தேவையா மளிகை பொருட்கள் , காய்கறிகள் , மற்றும் பிஸ்கெட் , பால் பாக்கெட் ஆகிவை வழங்கப்பட்டது . செங்கல்பட்டு மாவட்ட தலைவர் B.தனுஷ் வினோத் செயலாளர் Y.நூர் முகமது , மாவட்ட துணை தலைவர் B.கணேஷ் ஆகியோரின் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் ,
சமூக இடைவெளியுடனும் , முகக்கவசம் ஆகியவை அணிந்தும் பாதுகாப்பான முறையில் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது .
14 ஆண்டுகளாக அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்ற கனவை நிறைவேற்றிய செங்கல்பட்டு தனுஷ் மன்ற நிர்வாகிகள்!!
தோழா படத்தில் வருவது போல் கழுத்துக்கு கீழ் உடல் செயலிழந்தது படுக்கையில் அவதி படும் சூர்யா என்ற இளம் பெண்ணிற்கு, சமூக ஆர்வலர் ஹரி கிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று, நடிகர் தனுஷ் பிறந்தநாளை ஒட்டி உதவி கரம் நீட்டியுள்ளனர் செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் மன்ற ரசிகர்கள்.
நேற்று மதியம் 2 மணி அளவில் கூடுவாஞ்சேரி யில் உள்ள அவர்களின் வீட்டில் நேரடியாக சென்று 1 மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற சமையல் பொருட்கள் வழங்கியதும் இன்றி, ஒரு நாளாவது அமர்ந்து உண்ண வேண்டும் என்ற கனவை நினைவாக்க சுமார் 16,000 ரூபாய் செலவில் வசிதியுடன் கூடிய மருத்துவமனையில் உபயோகிக்க படும் கட்டில் வாங்கி கொடுத்துள்ளனர் .