From the moment, the song ‘Marupiranthaal’ (Her Rebirth) was launched, it had its realms of glorifications and acclaims from nook and corners for a phenomenal concept. The mellifluous vocalisms of Dr. Shani Hafees and her daughter Reyah Fatima Hafees, the lyrical lines by Ruxeena Musthafa, and musical score by Yeldho P. John made endued the crowds with a colossal impact. With the song conferred with dozens and dozens of accolades at various international film and music festivals, it has reached yet another milestone of being conferred as ‘Best Music Video’ at 10th Dada Saheb Phalke Film Festival 2020.
Dr. Shani Hafees, a well-reputed Ayurveda doctor and Entrepreneur has conceptualized the song, directed it alongside Adarsh N Krishna apart from penning the script and producing it. With the high-spirited elations, she says, “This is a real big honor to all of us, who worked together as a family. Although we have been gaining accolades at various international film and music festivals, this is something big for us. An award named after the Father of Indian Cinema conferred to us is a lifetime achievement. I thank Yuvan Shankar Raja sir, who enabled a wider reach for the song through his U1 Records. I am so happy that the world has accepted our work, thereby appreciating the concept and emotions involved within it. This propels me personally to come up with much more works that will entertain and touch everyone emotionally.”
Abi Reji has handled the cinematography for this song, which is edited by Premsai Mukundan featuring Renju Renjimaar and Rose Sherin Ansari in the video. The beautiful song that encapsulates an emotional bonding between a transgender woman and her foster daughter has found a huge reach for its awe-inspiring theme.
While Dr. Shani Hafees has proved her proficiency in the world of music, she is already a reigning entrepreneur and is far-famed as the Founder & Managing Partner of Ayurdha Media House. ( Media Production Company based in Kerala).
Apart from being the ‘Winner Title’ at International Thai Film Festival, Marupiranthaal (Her Rebirth) has been awarded at various international film and music festivals like Bangkok ( Only music video officially selected from India), Calcutta International Cult Film Festival ( Entry for Golden Fox Awards), Buddha International Film Festival – Pune, Festigious International Film Festival, Los Angeles, ( Bronze medalist) Global Music Awards, California, Semi-Finalist to Rome Prisma Awards – Italy. It was also officially selected for the International Documentary & Short Film Festival of Kerala, AAB International Film Festival, Punjab, LGBTQ Shorts Film Festival – United States, International Short Film Festival of Pune, Chambal International Film Festival, Rajasthan and Jaipur International Film Festival 2020
பத்தாவது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் (2020) சிறந்த இசைப் பாடலுக்கான விருது பெற்ற ‘மறு பிறந்தாள்’!
‘மறு பிறந்தாள்’ (மீண்டும் பிறந்தாள்) இசைப் பாடல் வெளியிடப்பட்ட நொடியிலிருந்தே, மகிமைப் படுத்தப்பட்ட அதன் உள்ளடக்கத்துக்காகவும், தனித்துவமான கருத்துருவுக்காகவும், ஒவ்வொரு திசையிலிருந்தும் அபாரமான வரவேற்பைப் பெற்று வருகிறது. டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் மென்குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசையமைப்பாளர் யெல்தோ பி.ஜான் ஆகியோரின் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து ஏராளமான சர்வதேச திரைப்பட மற்றும் இசை விழாக்களில் பங்கு பெற்று பாராட்டுக்களைக் குவித்து வரும் இந்தப் பாடலுக்கு மேலும் இப்போது ஒரு பெருமைக்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆம்….பத்தாவது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் 2020 சிறந்த இசைப் பாடலுக்கான விருது ‘மறு பிறந்தாள்’ பாடலுக்குக் கிடைத்திருக்கிறது.
ஆயுர்வேத டாக்டராகவும் தொழில் முனைவோராகவும் புகழ் பெற்ற டாக்டர் ஷானி ஹபீஸ் தனது கருத்துருவில் உருவான இப்பாடலை ஆதர்ஷ் என்.கிருஷ்ணாவுடன் இணைந்து இயக்கியிருக்கிறார். மிகுந்து உற்சாகத்துடன் இது குறித்து விவரித்த அவர், “ஒரு குடும்பத்தைப்போல் ஒன்றிணைந்து செயல்பட்ட எங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய கெளரவமாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு சர்வதேச திரைப்பட மற்றும் இசை விழாக்களில் பங்கு கொண்டு பாராட்டுதல்களைப் பெற்றாலும் இந்த விருது ஒரு மிகப் பெரிய அங்கீகாரம் என்றால் மிகையாகாது. இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதா சாஹிப் பால்கே பெயரில் வழங்கப்படும் விருதைப் பெறுவதை எங்கள் வாழ்நாள் சாதனையாகவே கருதுகிறோம். யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் எங்கள் இசைப்பாடலை மிகப் பரவலாக எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்த யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இசைப் பாடலின் கருத்தையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு உலகம் அங்கீகரித்து பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இதுபோல் மேலும் பலவற்றை உருவாக்கி மக்களை உணர்வு பூர்வமாக மகிழ்விக்க வேண்டும் என்ற உத்வேகமும் எனக்கு ஏற்படுகிறது”. என்றார்.
அபி ரெஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்பாடலின் படத்தொகுப்பை பிரேம்சாய் முகுந்தன் செய்திருக்கிறார். ரென்ஜூரென்ஜிமார் மற்றும் ரோஸ் ஷெரின் அன்ஸாரி நடித்திருக்கிறார்கள். திருநங்கை ஒருவருக்கும் அவரது வளர்ப்பு மகளுக்குமான உணர்வு பூர்வமான பந்தத்தை விளக்கும் வகையில் அமைந்த இந்த அழகான பாடல், அதன் பிரமிப்பூட்டும் கருவுக்காவே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தனது அறிவுத் திறனை இசைத் துறையில் நிரூபித்திருக்கும் டாக்டர் ஷானி ஹபீஸ், தொழில் முனைவோராக தன்னை நிரூபித்து புகழ் பெற்றவர். மேலும் கேரளாவில் உள்ள ஊடகத் தயாரிப்பு நிறுவனமான ஆயுர்வேதா மீடியா ஹவுஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரராகவும் இவர் இருந்து வருகிறார்.
சர்வதேச தாய் திரைப்பட விழாவில் டைட்டில் விருது பெற்றிருக்கும் ‘மறு பிறந்தாள்’, பாங்காக் இசை விழாவிலும் விருது வென்றிருக்கிறது. பாங்காக் இசை விழாவுக்கு இந்தியாவிலிருந்து அதிகார பூர்வமாகத் தேர்வான ஒரே இசை வீடியோ ‘மறு பிறந்தாள்’ மட்டுமே. கோல்டன் ஃபாக்ஸ் விருதுக்கு நுழையத் தகுதி பெற கலந்து கொள்ள வேண்டிய சர்வதேச கல்கத்தா கல்ட் திரைப்பட விழா, புத்தா சர்வதேச திரைப்பட விழா (பூனா), லாஸ் ஏன்ஜல்ஸ் ஃபெஸ்டிஜியஸ் சர்வதேச திரைப்பட விழா (வெண்கல விருது வென்றது), குளோபல் மியூசிக் அவார்ட் (கலிபோர்னியா), செமி ஃபைனலிஸ்ட் டு ரோம் பிரிஸ்மா விருது (இத்தாலி) ஆகியவற்றையும் வென்றிருக்கிறது. கேரளாவில் நடைபெறும் சர்வதேச விவரண மற்றும் குறும்பட விழா, பஞ்சாபில் நடைபெறும் ஏஏபி சர்வதேச திரைப்பட விழா, அமெரிக்காவில் நடைபெறும் குறும்பட விழா, பூனாவில் நடைபெறும் சர்வதேச குறும்பட திரைப்பட விழா, ராஜஸ்தான் மற்றும் ஜெய்பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா 2020 ஆகியவற்றுக்கும் அதிகாரபூர்வமாக மறுபிறந்தாள் தேர்வாகியிருப்பது குறிப்பிடத் தக்கது