Greetings letter from President Bharathiraja & Members of TFAPA to DMK-President, Thiru MK.Stalin

343

 

தமிழக அரசின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும்
மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்!

வணக்கம்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகர மேயராகப் பணியாற்றிய போது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதே போல் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் நிர்வாகத்தை தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழக உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக் கொள்ள தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

திரைத்துறை சார்ந்த நலங்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

மக்கள் எதிர்பார்த்த பெரிய ஒரு மாற்றத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

கொரானா காலகட்டம். மிகவும் சவாலான நாட்கள் தங்கள் முன் நிற்கிறது. பொருளாதாரப் பிரச்சனைகளை சரிசெய்து மக்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களை எதிர் நோக்கி நிற்கிறோம்.

உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்கு கொண்டு வரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!
உங்கள் பாசத்திற்குரிய,
பாரதிராஜா

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com