ஒரே ஷாட்டில் 6 காமிராவில் பதிவான விஷாலின் எமோஷன் சீன்.

91

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வரும் ஆக்‌ஷன் படம் #லத்தி.

இதன் படபிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடந்தது. 68 நாட்கள் ஆக்‌ஷன் காட்சிக்காக மட்டும் படபிடிப்பு நடை பெற்றது.

சென்னையில் நடந்த ஒரு காட்சியில், படத்தில் கிளமாக்ஸ் காட்சிக்கு முன்னால், படம் விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இடத்தில், விஷாலின் மகனை கடத்தி விடுகிறார்கள். என்ன செய்வதென்று கலங்கி நிற்க வேண்டும்.. இதுதான் சார் சீன் என்று விஷாலுக்கு சொல்கிறார் டைரக்டர்.
‘எனக்கு உடனே ஞாபகத்துக்கு வந்தது #அவன்இவன் படத்துக்கு டைரக்டர் பாலா சார் சொன்ன பல காட்சிகள் மனதில் வந்தது. அந்த எமோஷன் இந்த இடத்துக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். உடனே டைரக்டரை கூப்பிட்டு,
நான் ஒரே டேக்கில் நடித்து விடுகிறேன்.. இன்னொரு டேக்குன்னு திரும்ப திரும்ப நடிக்க கேட்காதீர்கள் என்று சொன்னேன். உடனே ஆறு காமிராவை வரவழைத்தார்கள்.
அந்த எமோஷனை வரவழக்க மூன்று நிமிடங்கள் எடுத்து கொண்டேன். அதன் பின் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். சிறப்பாக வந்தது என்று டைரக்டர் சொன்னதும் தான் பெருமூச்சே வந்தது.. என்றார் விஷால்.

#லத்தி டீசர் வெளியீடு,
பிரசாத் ஸ்டுடியோவில் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் பிரமாண்ட விழா வரும் 24ம் தேதி மாலை 6மணிக்கு நடக்கிறது.

#LaththiTeaserFromJuly24

RANA PRODUCTIONS “LATHTHI” MAIN ARTIST LIST
Vishal,
Sunaina,
Lyrish Ragav,
Ramana,
Sunny.PN,
Vinoth,
Sagar Prabhu,
Thalaivasal Vijay,
Munishkanth,
A.Venkatesh,
Misha Ghoshal,
Vinothini,
Mohan Ram,
Brana and etc..

TECHNICIAN LIST:
Banner: RANA PRODUCTIONS,
Produced By:
Actor RAMANA – Actor NANDA,
Director: A.VINOTH KUMAR,
Music: YUVAN SHANKAR RAJA,
DOP: BALASUBRAMANIEM,
Additional DOP:
BALAKRISHNA THOTA,
Editor: N.B.SRIKANTH,
Stunt: PETER HEIN,
Art: S.KANNAN,
Costume Designer:
VASUKI BHASKAR,
VFX Head: HARIHARA SUDHAN,
Sound Mixing: TAPAS NAYAK,
Lyricist: KARTHIK NETHA,
PRO: Johnson,
Publicity Designer:
JOSEPH JAXSON,
Telugu PRO: Vamsi Shekar,
Kerala PRO: C.K.Ajaykumar.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com