Time to insure the dance floors! The year’s best-ever peppy track is all set to arrive on November 20

443

 

The second single ‘CUTE PONNU’ from Trident Arts R Ravindran’s ‘Enna Solla Pogirai’ starring Ashwin Kumar in the lead role, directed by A Hariharan is getting released on November 20, 2021.

Everything involving Trident Arts R Ravindran’s forthcoming production ‘Enna Solla Pogirai’ starring Ashwin Kumar Lakshmikanthan has been adorning the minds and hearts of film and music lovers. Breezy Rom-Coms have become a rarity these days, and the arrival of the ESP teaser strongly spread its romantic aroma, which was followed by the first single track ‘Aasai’, which wowed the towns instantly. Now the team is exhilarated in announcing the arrival of its second single titled ‘CUTE PONNU’, which will release on November 20, 2021.

Giving insight on this song, director A Hariharan says, “It’s a peppy party track, and will feature Ashwin Kumar, Pugazh, Teju Ashwini, and Avantika Mishra shaking their legs. The song has found an emblazoning youthful and colorful impact with the magical touch of Anirudh, who has crooned it. The peppy numbers of Vivek-Mervin have always been the everlasting anthems of dance floors, and this one is going to be a tremendous pick for the party animals. Moreover, the song will reflect the youthful and colourful mood of this film. Therukural Arivu has penned the lyrics that are more relatable to the current generation, and of course, as already mentioned, Anirudh has nailed it down perfectly with his electrifying rendering.”

Written and directed by A Hariharan, Enna Solla Pogirai is produced by R. Ravindran of Trident Arts. Richard M Nathan (DOP), G. Durairaj (Art), Mathivathanan (Editor), Balakumaran M (Dialogue), Apsar R (Choreography), A Keerthivasan (Stylish), Jayaraman (Production Coordinator), S. Rubini (Production Controller), T. Selvaraj-SN Ashraf (Production Executive), Suresh Chandra -Rekha D’One (PRO), Beat Route/Hariharan (Creative & Marketing), Tandora (Publicity Designs).

தயாராகட்டும் டான்ஸ் ஃப்ளோர் , இந்த ஆண்டின் மிகச்சிறந்த பெப்பி பாடல், நவம்பர் 20 அன்று, வெளி வருகிறது !

Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள, “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘CUTE PONNU’ 2021 நவம்பர் 20 அன்று வெளியாகிறது.

Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் எந்த ஒரு அறிவிப்பும், திரை ஆரவலர்களிடையேயும் இசை காதலர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மனம் மயக்கும் ரொமாண்டிக் காமெடிகள் இந்நாட்களில் மிக அரிதாகவே திரையில் நிகழ்கிறது. ஆனால் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் மிக அழுத்தமாக காதல் உணர்வை காற்றில் பரப்பியது. அதனை தொடர்ந்து வெளியான முதல் சிங்கிள் பாடல் “ஆசை” மொத்த நகரத்தையும் மயக்கத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது படக்குழு படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘CUTE PONNU’ பாடலின் வெளியீட்டை அறிவித்துள்ளது. இப்பாடல் 2021 நவம்பர் 20 அன்று வெளியாகிறது.

பாடல் குறித்து இயக்குநர் A.ஹரிஹரன் கூறியதாவது…

இது ஒரு பார்டியில் நிகழும் பெப்பி பாடல், இப்பாடலில் அஷ்வின் குமார், புகழ், தேஜு அஷ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா இணைந்து நடனமாடியுள்ளார்கள். இப்பாடலில் இளமை துள்ளலும் வண்ண கோலாகலமும் இணைந்து நடக்கும் மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார் தன் குரலில் பாடலை பாடியுள்ள இசையமைப்பாளர் அனிருத். விவேக் மெர்வின் கூட்டணியில் வெளியாகும் பெப்பி பாடல்கள், டான்ஸ் ஃப்ளோர்களை அதிரச்செய்யும் அந்த வகையில் இந்தப்பாடல், பார்டியில் அனைவரையும் உற்சாகத்தின் உச்சிக்கு அழைத்து செல்லும் பாடலாக இருக்கும். மேலும் படத்தின் இளமை துள்ளலையும் வண்ணமய தோற்றத்தையும் பிரதிபலிப்பதாக இப்பாடல் இருக்கும். இந்த தலைமுறையினரை எளிதில் கவரும் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு இப்பாடலை எழுதியுள்ளார். முன்பே கூறியபடி இசையமைப்பாளர் அனிருத் தனது அட்டகாசமான குரலில் மாயத்தை நிகழ்த்தியுள்ளார்.

இயக்குநர் A.ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள “என்ன சொல்ல போகிறாய்” படத்தை Trident Arts நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.தொழில்நுட்ப குழுவில் ரிச்சர்ட் M நாதன் (ஒளிப்பதிவு ), G.துரைராஜ் (கலை), மதிவதனன் (எடிட்டர்), பாலகுமாரன் M (உரையாடல்), அப்சர் R (நடன அமைப்பு), A கீர்த்திவாசன் (ஸ்டைலிஷ்), ஜெயராமன் (தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்), S.ரூபினி (புரடக்சன் கண்ட்ரோலர் ) , D.செல்வராஜ்-SN அஷ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி), சுரேஷ் சந்திரா -ரேகா D one (மக்கள் தொடர்பு), Beat Route/ஹரிஹரன் (கிரியேட்டிவ் & மார்க்கெட்டிங்), தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்ஸ்).

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com