தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் கலாச்சாரமான சிலம்பாட்டம் பயிற்சி வகுப்பு

85

 

தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் கலாச்சாரமான சிலம்பாட்டம் பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி நகர தலைமையினால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை 96 மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அனைவருக்கும் சீருடை  வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கும் சிலம்பாட்ட ஆசிரியர் திரு.அஜய் அவர்களுக்கு திமிரி நகர தலைமை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மாதந்தோறும் 20 ஆயிரம்  சம்பளமாக வழங்கப்படுகிறது. இன்று சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் முன்னிலையில் பயிற்சி பெறும் அனைவரும் சிலம்பாட்டத்தை செயல்படுத்தி காட்டினார்கள்.

மேலும் தளபதி அவர்களின் உத்தரவின்படி ராணிப்பேட்டை மாவட்டம் தொண்டரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திரு. மணிகண்டன் அவர்கள் ஆட்டோ வழங்குவதற்கு ரூ. 1,20,000 முன்பணம் செலுத்தி, தொண்டரணி தலைவர் திரு. ரமேஷ் அவர்கள் முன்னிலையில் திரு. நாகராஜ் என்பவருக்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் இலவச ஆட்டோவினை வழங்கினார். மேலும் ஆட்டோ தொழில் செய்து மாததவனை ரூ.7,500யை திரு. நாகராஜ் அவர்கள் செலுத்திக் கொள்வார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் திரு. மோகன் MC, மாவட்ட செயலாளர் திரு. காந்திராஜ் MC, இளைஞரணி தலைவர் திரு. வினோத், மாணவரணி தலைவர் திரு. தீனா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com