SUDHANDHIRA DESAME VANDE MATARAM | KS CHITHRA | SHANKAR MAHADEVAN | GV PRAKASH | FOLK MARLEY RECORDS

225

30 வருடமாக சினிமாவில் போராடும்
கவிஞர் எழுதிய சுதந்திர தின சிறப்புப் பாடல்,
“சுதந்திர தேசமே – வந்தே மாதரம்”
சித்ரா, சங்கர் மகாதேவன், ஜீ.வி.பிரகாஷ், அந்தோணிதாசன்
குரல்களில் வெளியானது.

நிறைய கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைகிறார், திருமாறன். சில வருடங்களுக்குப் பின் 1994ல் வி.சேகர் இயக்கிய “காலம் மாறிப்போச்சு” படத்தில் கடைசி உதவி இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு இடம் கிடைக்கிறது. அதன் பின் 1998ம் ஆண்டு “கோல்மால்” படத்தின் மூலமாக பாடலாசிரியராக “வாடா வான்னா”, “ஹே பாப்பா, ஓ பாப்பா” என இரண்டு பாடல்கள் எழுதுகிறார், திருமாறன்.

பின்னர் சினிமாவில் தொடர்ந்து உதவி இயக்குநராக பணிபுரிகிறார், பல திரைக்கதை விவாதங்களில் கலந்துகொள்கிறார், ஆனாலும் ஒரு நிலையான இடமோ வருமானமோ வாழ்க்கையோ கிடைக்காமல் காலம் ஓடுகிறது.

அதன் பின்னர் இராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான, “மாயா” படத்தில், “தத்தக்கா பித்தக்கா” என்ற பாடலை எழுதுகிறார்.

மகளீர்க்காக படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றும் போது, அந்தோணிதாசனை முதல்முறையாக சினிமாவில் நடிகராக அதே படத்தில் படத்தில் அறிமுகப்படுத்தியவர் இந்த திருமாறன் தான்.

பாடல் எழுதும் திறமையோடு அதற்கு மெட்டுப்போடும் திறமையும் கொண்டவர் திருமாறன். அவர் எழுதிய பாடல்களை அவரே மெட்டுப்போட்டு அழகாக பாடுவார் திருமாறன். அவரைப் பற்றி தெரிந்தவர்கள் அவர் வந்துவிட்டாலே பாடச்சொல்லி கேட்டு ரசிப்பது வழக்கம்.

அப்படி ஒருமுறை, பாடகராக இசையமைப்பாளராக வளர்ந்திருந்த அந்தோணிதாசனிடம் ஒரு பாடலைப்பாடுகிறார் திருமாறன். மிக அழகான செறிவான கருத்துகள் கொண்ட அந்தப்பாடல் அந்தோணிதாசனுக்குப் ரொம்பவே பிடித்துப்போக இந்தப்பாடலை நானே எங்களது இசை லேபல் “ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்” மூலமாக வெளியிடுகிறேன் என்று திருமாறனிடம் கூறுகிறார்.

அந்தப்பாடல் தான் சுதந்திர தேசமே வந்தே மாதரம் பாடல். நமது இந்திய நாட்டின் பெருமையைப் பேசும் ஒரு பாடல். இன்று ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.

1998க்குப் பின் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் பாடலாசிரியராக வெளிச்சத்திற்கு வருகிறார், திருமாறன்.

“சுதந்திர தேசமே வந்தே மாதரம்” பாடலை, சின்னக்குயில் சித்ரா, சங்கர் மகாதேவன், ஜீவி பிரகாஷ்குமார், அந்தோணிதாசன், கேசவ் ராம், ரீத்தா அந்தோணிதாசன், ஹஷ்வந்த், மீனாட்சி இளையராஜா மற்றும் குட்டிப்பாப்பா ரௌடிபேபி வர்ஷினி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப்பாடலை கேட்டோர் அனைவரும், பாடலும் பாடல் வரிகளும் நெஞ்சைத் தொடுவதாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். பாடலாசிரியராக திருமாறன் இன்னும் பல பாடல்களை எழுதி பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள். இந்த சுதந்திர தினத்தைச் சிறப்பாக கொண்டாட கிடைத்திருக்கிறது, “சுதந்திர தேசமே வந்தே மாதரம்” பாடல். நம் நாட்டின் 77வது சுதந்திர தினத்தில் நம் மக்களுக்காக எங்களது சிறிய பரிசாக இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறோம்.

சுதந்திர தேசமே வந்தே மாதரம்
பாடல் வரிகள்:

பல்லவி:
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம்

சரணம் 1:
வானம் தொடுகின்ற பாரதத் தாயின்
வளர்ந்த கூந்தல் எல்லையாய்
அந்த கொஞ்சும் குமரியின்
பாதச் சதங்கைகள் பரதம் பயிலுது எல்லையாய்
நெற்றியின் வேர்வை கங்கையாய்
கிழக்கினில் பாய்ந்தால் எல்லையாய்
பளிங்கு மின்னலின் பார்வையால்
பாலைகள் மேற்கினில் எல்லையாய்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

சரணம் 2:
ஆல மரத்தின் விழுதுகள் நாம்
ஆணி வேரோ அவளல்லவா
அந்த ஆகாயத்தின் பறவைகள் நாம்
அவளின் மடியே கூடல்லவா
மொழிகளில் இனங்களில் வேறுபட்டாலும்
மூச்சைத் தந்தது தாயல்லவா
மதங்களில் ஜாதியில் மறைந்திருந்தாலும்
மனிதர் நாம் அவள் சேயல்லவா
வந்தே மாதரம் வந்தே மாதரம்

சரணம் 3:
புலியினை முறத்தினில் துரத்தியதெல்லாம்
புறநானூற்று வீரமடா
அந்த புத்தன் காட்டிய வழியினில் காந்தி
போரிட நூற்றது ராட்டையடா
ஒற்றுமையாலே ஒளியெனும் சுதந்திரம்
பெற்றதில் இங்கே பெருமையடா
இங்கு பற்றி எரிகிற வேற்றுமைத் தீயினை
பார்த்து நிற்பது கொடுமையடா
இங்கு பற்றி எரிகிற வேற்றுமைத் தீயினை
பார்த்து அணைப்பது நம் கடமையடா

#FolkMarleyRedords #SudhandhiraDesame #VandeMataram #Thirumaran #KSChithra #ShankarMahadevan #GVPrakashkumar #AnthonyDaasan #Varshini #ReethaAnthony #MeenakshiIlayaraja #KeshavRam #Ashwanth

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com