தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான திரு. பூச்சி எஸ். முருகன் அவர்களுக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணைய தலைவர் நீதியரசர் எஸ்.பாஸ்கரன் அவர்கள் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி விருது வழங்கினார்.

244

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்(கலை பண்பாட்டுத் துறை) மற்றும் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையம் இணைந்து இயல் இசை நாடக மன்ற உள்கலையரங்கத்தில் நடத்திய விழாவில் இயல் இசை நாடக மன்ற தலைவர் திரு.வாகை சந்திரசேகர் அவர்கள் தலைமையில், இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் – செயலாளர் திருமதி. விஜயா தாயன்பன் அவர்கள் முன்னிலையில் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான திரு. பூச்சி எஸ். முருகன் அவர்களுக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணைய தலைவர் நீதியரசர் எஸ்.பாஸ்கரன் அவர்கள் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி விருது வழங்கினார்.

உலக நட்புறவு மையத் தலைவர் ஜி.மணிலால், அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன், தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத் தலைவர் முனைவர் தி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com