செப் 17 மற்றும் 18 ம் தேதிகளில் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

73

கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் மய்யம் மகளிர் சாதனையாளர் விருது – 2022 விழா.

மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாகவும் நிர்வாகிகளை ஊக்கப்படுத்தவும் மண்டல வாரியாக கமல்ஹாசன் அறிவுறுத்தலின் பேரில் கட்சியின் உயர் நிர்வாகிகள் ஆலோசனை கூடங்களை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்வார் என தகவல் வெளியான நிலையில்
அதன் முதல் பயணமாக கோவை மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார்.
செப்டம்பர் 17, 18 தேதிகளில் கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து கமல்ஹாசன் தலைமையில் தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை தேர்தெடுத்து மய்யம் மகளிர் சாதனையாளர் விருது – 2022 நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com