Yuvan Shankar Raja is producing ‘Maamanithan’ for his production house of YSR Films. This movie is directed by Seenu Ramasamy and features Vijay Sethupathi and Gayathrie in the lead roles. Maestro Isaignani Ilaiyaraaja and Yuvan Shankar Raja together have composed music. Maamanithan is a feel-good family drama, which is all set for the worldwide theatrical release on June 24, 2022. Studio 9 RK Suresh is releasing this movie. Marking the release of this movie, actor Vijay Sethupathi, Actress Gayathrie, director Seenu Ramasamy and Distributor-Actor RK Suresh interacted with the press and media.
Distributor-Actor RK Suresh says, “There are only a few filmmakers, who make movies on realistic values, and Seenu Ramasamy is one among them. This movie will offer a fresh experience to the audiences without even the faintest traces of Dharmadurai. It will be a movie that audiences can relate to. The movie is set in three different locations. The story begins in Theni, travels to Kerala, and finally ends at Kasi. This movie has created a deep impact on me. Vijay Sethupathi has delivered the best contribution to this movie. This movie will offer him great success. Maamanithan is going to be a special movie for Gayathrie. The story demanded a variety of performances based on three different situations in this movie, and she has nailed it down perfectly. I strongly believe the movie will garner success.”
Actress Gayathrie said, “We all have a perception about villages, but the way, Seenu Ramasamy projects them is completely unique and fresh. This is a pure love story and has a story of 40 years of life. We have worked so hard towards nurturing this project. The movie has shaped up in such a way of reflects our real lives. Director Seenu Ramasamy sir is the main reason behind it. I am delighted to have Ilaiyaraaja sir and Yuvan Shankar Raja sir together compose music for this movie. I feel blessed for being a part of this movie.”
Actor Vijay Sethupathi said, “Maamanithan happened when Yuvan said that he along with his father Ilaiyaraaja would compose music together if I am playing the lead character in this movie. Seenu Ramasamy sir has an inherent ability to phenomenal concepts in a simple way. He has created Maamanithan in a similar way. During the days, when I aspired to become an actor, I would yearn to become someone like Guru Somasundaram. I am glad that I got an opportunity to share the screen with him in this movie. Both filmmaker and cinematographer are the only reason behind completing this movie in a shorter period. The story is placed in three different places, and completing the shooting in a short span of time was completely possible due to the sheer commitment of the director & cinematographer. Gayathrie has accepted a role that many actresses didn’t want to perform. She is an inborn talent and they are yet to be revealed on the screens. Maamanithan will be more like watching our stories. When I got the opportunity to be a part of the movie that features a musical score by Isaignani Ilaiyaraaja sir and Yuvan Shankar Raja, I earnestly felt that Seenu Ramasamy sir should direct this movie. Maamanithan will be a great experience for the audience watching it.”
Director Seenu Ramasamy said, “I want the entire world to appreciate and acclaim Vijay Sethupathi’s performance in this movie. Initially, the movie was supposed to feature the Karthik Raja-Yuvan Shankar Raja-Ilaiyaraaja trio musical. Later, Karthik Raja stepped out of the project due to some reasons. This story was ignored and rejected by many actors. It was during that point of time; Vijay Sethupathi expressed his desire to be a part of this project. Later, it was confirmed that Yuvan Shankar Raja will be producing this movie, and I wanted this to be a special movie for them. I wanted to make this movie in the same place, where Ilaiyaraaja had lived. We shot several scenes from the movie in Pannaipuram of Theni district, where Ilaiyaraaja and his family lived. I have always strived to extract the natural performance of actors. I narrated the script to many actresses, but most of them weren’t happy with the second half. Significantly, Gayathrie showed complete interest in this movie and wanted to be a part of it. I am confident that Gayathrie will get a National award for her outstanding performance in this movie. I dedicate this movie to Jeeva and Ilaiyaraaja. This movie will address and identify the great human beings around us. I request my friends from the press and media fraternity to facilitate the movie’s good reach among the audiences. I request everyone, who watches the movie to express their views and opinions about the movie.”
‘மாமனிதன்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
விநியோகஸ்தர், நடிகர் RK சுரேஷ் கூறியதாவது..
வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படத்தை தயாரித்ததற்கு யுவன் சாருக்கு நன்றி கூறிகொள்கிறேன். இந்த கதை மூன்று இடங்களில் நடக்கும், தேனியில் ஆரம்பித்து, கேரளா சென்று, காசியில் முடிவடைவது போல் கதையமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் எனக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். காயத்ரிக்கு இந்த படம் முக்கியமானதாக இருக்கும். அவர் மூன்று வெவ்வேறு வகையான சூழ்நிலையில் தன் நடிப்பை வெளிப்படுத்த வேண்டியது போல கதையமைப்பு இருக்கும். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நான் உறுதியாய் நம்புகிறேன். நன்றி
நடிகை காயத்ரி கூறியதாவது..
கிராமம் என்று நமக்குள் இருக்கும் பார்வையை, வேறு கோணத்தில் காட்டுபவர் சீனுராமசாமி சார். இந்த படம் ஒரு காதல் கதை. இந்த படத்தில் 40 வருட வாழ்க்கை கதை இருக்கிறது. அதற்கான உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த படம் நிஜ வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாக வந்துள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் சீனுராமசாமி. இந்த படத்தில் யுவன் சார், இளையராஜா சார் இணைந்து இசையமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தின் பணியாற்றியது என் பாக்கியம் நன்றி.
நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது..
நீங்க நடித்தால் நானும் – அப்பாவும் ம்யூசிக் பண்றோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம்தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி. அப்படிதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிபட்ட நடிகர் குரு சோமசுந்தரம். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இந்த படத்தை குறுகிய காலத்த்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்க கூடிய கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க
இருவர்களுடைய அர்பணிப்பு தான் காரணம். பலர் நடிக்க ஒத்துகொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிகொண்டு வரப்படவில்லை. இந்த படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்க போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்க்கு இருக்கும்.
இயக்குனர் சீனுராமசாமி கூறியதாவது…
இந்த திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிபார்க்க வேண்டும் என்று நான் விருப்பபடுகிறேன். முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா – இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது. நடிகர்களுக்குள் இருக்கும் இயல்புணர்ச்சியை வெளிகொண்டுவருவதே என்னுடைய பணியாக இருந்தது. நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துகொடுத்தார். இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது. இந்த படத்தை நீங்கள் அனைவரும் மக்களிடம்
கொண்டு சேர்க்க வேண்டும். இந்த படத்தை பார்க்கும் மக்கள் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். நன்றி.
*