கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழக விருது

565

வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூல்களுக்கான விருதை அறிவித்து அதற்கான விழா நேற்று- (ஜூலை 10 ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றது.

நீதியரசர் S.K.கிருஷ்ணன் விருதை வழங்கினார்

ரவிதமிழ்வாணன், SP.பெருமாள்ஜி முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட உருவாக்கத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளியிட்டு பலராலும் பாராட்டு பெற்று வருகிறார்.

திரைப்படம் பற்றிய இப்படி ஒரு நூல் எங்கும் வெளிவராத நிலையில் புனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த நூலை பார்த்த பிரபல திரைப்பட பேராசிரியர்
சமர் நாட்டக்கே அவர்கள் மூலம் இந்த நூல் உலகின் பல்வேறு திரைப்பட கல்லூரிகளுக்கு சென்று சேர்ந்திருக்கிறது.

விரைவில் கட்டில் திரைப்படத்திற்கான ஆடியோ ரிலீசும், தியேட்டர் ரிலீசும் நடைபெற உள்ள சூழலில் இந்த விருது கவனம் ஈர்க்கத்தக்கதாக உள்ளது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com