Kalaignar TV Vinayagar Chathurthi Special programmes Press Release and images-Tamil

81

கலைஞர் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”

 

கலைஞர் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதன்படி செப்டம்பர் 7 வருகிற சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நிம்மதியோடும், மகிழ்வோடும் வாழ்பவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? என்கிற தலைப்பில் சிரிக்க வைக்கும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .

மேலும்  பிற்பகல் 1.30 மணிக்கு எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தணு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, பிரித்விராஜன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து, கிரிக்கெட்டை மையப்படுத்திய காதல், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த “ப்ளூ ஸ்டார்” சூப்பர் ஹிட் திரைப்படம் மற்றும் காலை 10.00 மணிக்கு விஷ்ணு விஷால் ,ஐஸ்வர்யா லஷ்மி மற்றும் கருணாஸ் நடிக்கும் “கட்டா குஸ்தி”  திரைப்படமும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com