Dhanush And Aishwaryaa Rajinikanth Announce Separation After 18 Years Of Marriage Life

308

 

நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளார்.

சமந்தா- நாகசைதன்யா ஜோடி சில மாதங்களுக்கு முன்பு தங்கள் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். அது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் தற்போது வரை பெரும் அதிர்ச்சியாய் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றுமொரு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆம் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் விவகாரத்தை தனுஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.  இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.  ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.  தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com