“என் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு தனி இடம்.” நடிகை பிந்து மாதவி !

212

என் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு தனி இடம். நடிகை            பிந்து மாதவி !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக திகழ்பவர் பிந்து மாதவி. தமிழ் பிக் பாசில் கலந்து கொண்டு பரபரப்பாகிய பிந்து மாதவி இப்போது , தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டுள்ளார்.

இதற்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுதே பிந்துமாதவி ஆர்மி என பல டிவிட்டர் மற்றும் #ஹாஷ்டாக்குகள் துவங்கப்பட்டு பரபரப்பாகி வருகிறது.

இப்போட்டியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரபல நடிகர் நாகார்ஜுனா ,
உங்களுக்கு தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்ற கேள்வியை பிந்து மாதவியிடம் கேட்க,

“சார்… இது நல்லது இது நல்லது இல்லனு சொல்ல முடியாது, இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். சென்னைக்கும் எனக்கும் மிக ஆழமான உறவு இருக்கு, சென்னைக்கு என் இதயத்தில் தனி இடம் இருக்கு, சென்னையில் தான் நான் வேலை பார்க்கிறேன், என் தாய் மொழி தெலுங்கு.. ரெண்டுமே எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி தான்” என கூற,
சூப்பர் பதில் என்று நாகார்ஜுனா பாராட்டினார் .

பிந்து மாதவியின் இந்த பதிலினை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆக்கி வருகின்றனர்.

இந்த போட்டியினை நடிகர் நாகர்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கி வருகிறார். இப்போட்டி பிந்து மாதவிக்கு தெலுங்கிலும் பெரும் புகழை பெற்றுத்தருமென அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

தமிழில் அவரது நடிப்பில் நடிகர் சசிகுமாருடன் யாமிருக்க பயமேன், மாயன் மற்றும் புரியாத புதிர் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாப்பத்திரமாக கொண்ட யாமிருக்க பயமேன் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com