Actors Kalidas Jayaram, Mahat Raghavendra and eminent politicians grace the festive gathering of CTMA’s Aavanippoovarangu 2024!

85

 

CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association), had recently organised the auspicious Aavanippoovarangu 2024 in Chennai. It’s a festival observed and celebrated, a week after special occasion of Onam. This year, a special initiative was planned and materialized for donating the funds raised through this event for victims, who lost their homes during Wayanad Landslide. Thiru P.K. Sekar Babu, Honourable Minister of Hindu Religious & Charitable Endowment, Govt. of Tamil Nadu), was the Chief Guest, Dr. M. Mathiventhan, Honourable Minister of Adi Dravidar Welfare, Govt. of Tamilnadu, was the Guest of Honour,Actors Mahat Raghavendra and Kalidas Jayaram was the celebrity guests.

Thiru P.K. Sekar Babu said, “This is a truly wonderful occasion to observe the unity in celebrating a cause that resonates deeply. A celebration becomes even more significant and impactful when it serves to assist those in need. I am delighted to learn that the funds generated through Aavanippoovarangu 2024 will be allocated to support the residents of Wayanad who have been displaced by the landslides. Initiatives like these are incredibly motivating, and I am pleased to see the event executed with such grace.”

Dr. M. Mathiventhan said, “I am delighted that the Aavanippoovarangu 2024 celebration has been organized with the noble intention of aiding the victims of the Wayanad Landslide. I extend my congratulations to the entire team responsible for this event and wish them continued success in their future endeavors.”

This 2-Day festive event was an exhilarating and heart-warming experience for the attendees with delicious Onam Sadhya, the traditional Tug of War among two groups, colorful pookaalam (Flowers) competition, grand dance, and comedy show along with many fun activities. Various awards were distributed as well during the event.

Sri V.C. Praveen, President CTMA, while thanking the chief guests, guests of honours and special guests for gracing the occasion, and making it more special, also heaped praises on the Tamil Nadu Goverment for ensuring safe and comfortable stay and live hood to the Malayali community in Tamil Nadu. He also thanked the Tamil Nadu goverment for rising to the occasion and stand first as a helping hand to the distressed people of Wayanad who were devastated by the land slides and torrential rains.

 

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கலந்து கொண்டனர்!

 

CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

திரு பி.கே. சேகர் பாபு பேசுகையில், “தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ள இந்தக் கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆவணிப்பூவரங்கு 2024 மூலம் பெறப்படும் நிதி, நிலச்சரிவுகளால் இடம்பெயர்ந்த வயநாட்டில் வசிப்பவர்களுக்கு ஆதரவளிக்க ஒதுக்கப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற முன்னெடுப்புகள் ஊக்கம் தருகிறது” என்றார்.

டாக்டர் எம்.மதிவேந்தன் கூறுகையில், “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உன்னத நோக்கத்துடன் ஆவணிப்பூவரங்கு 2024 கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்விற்கு காரணமான ஒட்டுமொத்த குழுவிற்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ருசியான ஓணம் சத்யா, இரு குழுக்களுக்கு இடையேயான பாரம்பரிய கயிறு இழுத்தல், வண்ணமயமான பூக்கோளம் போட்டி, பிரமாண்ட நடனம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல வேடிக்கையான நிகழ்வுகளுடன் இந்த இரண்டு நாள் பண்டிகை நிகழ்வு கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகமான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. நிகழ்வின் போது பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன.

ஸ்ரீ வி.சி. பிரவீன், சி.டி.எம்.ஏ. பிரெசிடண்ட் பிரவீன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் மலையாளிகளின் வாழ்வாதாரம் நலமுடன் இருப்பதற்கும் நிலச்சரிவு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பாரட்டினார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com