கலைஞர் டிவியில் “கழுவேத்தி மூர்க்கன்”, “இறைவன்” – பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

501

கலைஞர் டிவியில் “கழுவேத்தி மூர்க்கன்”, “இறைவன்” – பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

நமது கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினங்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜனவரி 15, தமிழ் புத்தாண்டு பொங்கல் தினமான தை முதல் நாளன்று, காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு அருள்நிதி – துஷாரா விஜயன் – சந்தோஷ் பிரதாப் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிநடை போட்ட “கழுவேத்தி மூர்க்கன்” சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு அஜித் குமார் – மஞ்சு வாரியர் நடிப்பில் “துணிவு” சிறப்பு திரைப்படமும், மாலை 6 மணிக்கு தமிழ் திரையுலகம் மொத்தமாக ஒன்றுதிரண்ட “கலைஞர் நூற்றாண்டு விழா” கொண்டாட்டத்தின் முதல் பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஜனவரி 16, திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று, காலை 10:00 மணிக்கு ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் “இறைவன்” விறுவிறுப்பான சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் – இவானா நடிப்பில் “லவ் டுடே” சிறப்பு திரைப்படமும், மாலை 6:00 மணிக்கு “கலைஞர் நூற்றாண்டு விழா” கொண்டாட்டத்தின் இரண்டாவது பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com