
“ருசிக்கலாம் வாங்க” சீசன் – 2
புதுயுகம் தொலைக்காட்சியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்த “ருசிக்கலாம் வாங்க” சீசன் – 2 சமையல் நிகழ்ச்சி, புதிய மாற்றங்கங்களோடு தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது .
நேயர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திருமதி.யோகாம்பாள் சுந்தர் அவர்கள் நவராத்திரியின் ஒன்பது தினங்களின் வண்ணங்கள் மற்றும் தேவியர்களின் கதைகளுடன் ஒன்பது நாட்களுக்கான பிரசாதங்களை செய்து காட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் ஒன்பது நாட்களுக்குமான ராகம் பாடல் மற்றும் தாண்டிய நடனங்கள் இணைந்து ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை நவராத்திரி ஸ்பெஷலாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் மீனாட்சி கலகலப்பாக கலந்துரையாடி வழங்குகிறார் . ருசிக்கலாம் வாங்க நவராத்திரி ஸ்பெஷல் வரும் மூன்றாம் தேதி முதல் மதியம் 12.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
