தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்க பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

508

மார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்க பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்ட போட்டியில் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இதன் மூலம் அவர், 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

இலக்கிய தாசன் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்க பதக்கத்தையும் வென்றார்.

சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கத்தின் தலைவரான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் திரு செண்பகமூர்த்தி அவர்கள் இவர்கள் இருவரின் சாதனையும் பாராட்டி பரிசளித்தார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com