
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 8,25,537- ஆக உயர்வு.
இன்று மட்டும் 761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,25,000–த்தை தாண்டியது.
இன்றைய 761 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 8,25,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 761 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
இதில் 218 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,571
இன்று 882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 8,06,018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.