Police Inspector Balamurali dies of coronavirus
On June 5th, Balamurali was having fever and later tested for COVID19. Following this, he was admitted to the Mahanadi hostel on the IIT campus in Chennai and was isolated due to coronavirus infection.
He was taken to Rajiv Gandhi Hospital in two days as his condition was deteriorated. And his condition was informed to Chennai Police Commissioner AK Viswanathan. Following this, AK Viswanathan took care of Balamarali’s medical expenses of 2.25 lakhs.
Henceforth Balamurali’s health state improved. A medical team separately had monitored Balamurali. Yet his health has worsened once again today. He died subsequently without treatment for the evening.
சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி இயற்கை எய்தினார்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்
கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,
தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் பத்திரிகையாளர்கள் என முன்களப் பணியாளர்களில் காவல்துறையினரின் பங்களிப்பு அதிகமானது.
நோய்த்தொற்று ஆபத்து அறிந்தே முக கவசம் அணியாமல் போதிய இடைவெளி இன்றி தேவையற்று சுற்றித் திரியும் பொறுப்பற்ற மக்களை கட்டுப்படுத்தும் பணியில் சாலைகளில் இரவும் பகலுமாக பாடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர்.
இதுவரை சென்னையில் மட்டும் 700க்கும் அதிகமாக காவல்துறையினர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் .
இன்று 17-06-2020 இயற்கை எய்திய காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் , கடந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவரது குடியிருப்பு பகுதியில் பத்திரிகையாளர் குடும்பத்தின் மீது ஒரு சிலர் வெறுப்புணர்வை காட்டியபோது நேரில் சென்று உதவியதை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைக்கின்றோம்.
கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு சென்னை பெருநகர காவல் ஆனையர் தனிப்பட்ட அக்கறை எடுத்து பல உதவிகள் செய்த நிலையில் இன்று திரு.பாலமுரளி அவர்கள் நம்மை விட்டு மறைந்தார்.
கொரோனா நோய்த்தடுப்புப் பணியில் முன்கள வீரராக செயல்பட்டு 47 வயதிலேயே தன் இன்னுயிரை இழந்திருக்கும் திரு.பாலமுரளியின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.ஆய்வாளர் திரு.பாலமுரளியை இழந்து வாடும் குடும்பத்தினர் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரது துயரத்தில் பங்கேற்கிறோம்.
ஆழ்ந்த துயரங்களுடன்
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
17-06-2020