கொரோனா மட்டுமே கொல்கிறதா ? -A true story by Vasan. Suri

9
Header Aside Logo

கொரோனா மட்டுமே கொல்கிறதா ?

கொரோனா  –  தொற்றுகிறது
மருத்துவமனை – உறிஞ்சுகிறது
மருத்துவர்கள் – உதவ இயலாதவர்கள்
நோயாளி  – மரணிக்கிறார்
குடும்பத்தினர் – அன்புக்குரியவர்களையும் பணத்தையும்                                                           இழக்கிறார்கள்

முகுந்தன் ஒரு எளிமையான மனிதர். பணி ஒய்வுக்கு பிறகு  தன் மகள் மற்றும் மகன் நலன் வேண்டி வாழ்பவர். தன்  வயது முதிர்ந்த அன்னைக்கு அணைத்து பணிவிடையும் செய்து நல்ல மகனாகவும் வாழ்பவர்.

திடீரென ஒரு நாள் மூச்சு விட சிரமப்பட்டார். அவரின் மகள் மற்றும் மகனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.கொரோன காலமாக இருப்பதால்  எந்த மருத்துவமனையும் அவரை அனுமதிக்க தயாராக இல்லை.

வேறு வழி இல்லாமல் குரோம்பேட்  அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே
கொடுக்கப்பட்ட மோசமான வைத்தியம் , அவர்களின் தந்தையை காப்பாற்ற முடியுமா என்ற
சந்தேகத்தில் அவர்கள் மருத்துவரை வேண்டி நிற்க, அவர்களோ ஏகப்பட்ட பாரம்களை  எழுத
சொல்லி, அவரை வேறு ஒரு பிரபல மருத்துவமனைக்கு சிபாரிசு செய்தனர். அது ஒரு 5 நச்சத்திர ஹோட்டல் தரம்  கொண்ட மருத்துவமனை. பாரங்களை எழுதி கொடுத்துவிட்டு ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்த நேரத்தில் முகுந்தன்  அவர்களின் சுவாசநிலை  மிக மோசமாக , என்ன  ஏது  என்று பதற அவரின் ஆக்சிஜென் சப்ளை நிறுத்தப்பட்டது தெரியவந்தது.பின் சத்தம் போட்டு கெஞ்சி மீண்டும்அவருக்கு ஆக்சிஜென் கொடுக்கப்பட்டது .
அந்த பிரபல உயர்தர மருத்துவமனையின் பிரதிநிதிகள் மிக திறமையாக பேசி , ஆறுதல் கூறி ஒன்றரை  லச்ச  ரூபாய் முன் பணமாக செலுத்த முகுந்தனின் பிள்ளைகளை சம்மதிக்க வைத்தனர்.

(ஒன்றரை  லச்ச  ரூபாய் வெறும் சுவாச கோளாறுக்கும், மார்பு சலிக்கும்.)

ஆம்புலன்ஸ  அந்த மருத்துவமனையின் வாசல் வந்த நிமிடம் , அவரை உடனே கோவிட்   தீவிர சிகிச்சை  வார்டுக்கு கொண்டு சென்றனர். தந்தையுடன் செல்ல கூட விடாமல் பிள்ளைகளை பணம் கட்ட சொல்லி அழைத்து சென்றனர் மருத்துவமனையின் பிரதிநிதிகள் . பணம் கட்டிய பின்னரே அவர்களின் தந்தை கோவிட்  தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பது தெரிவிக்க பட்டது. எந்த வித பரிசோதனையும் செய்யாமல் அவர் கோவிட் தீவிர சிகிச்சை  பிரிவில் சேர்க்கப்பட்டார். அதற்குள்ள அவர்களின் மாமாவும் வந்து சேர்ந்து கொண்டார் உதவிக்கு.

சிறிது நேரத்தில் ஒரு மருத்துவர் வந்து நோயாளியின் விவரங்களை  கேட்க
தொடங்கினார்.இருக்கும் அத்தனை பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்ய வேண்டும் என  சொல்லி சென்றார். மேலும் பல பாரங்களை கொடுத்து கையெழுத்திட சொன்னார்கள் .  முகுந்தனின் பிள்ளைகளும் கையெழுத்திட்டனர் தம் தந்தையின் மரண ஒப்பந்தம் என தெரியாமல்.

மருத்துவர் மறுநாள் காலை கோவிட் பரிசோதனை செய்யப்படும், பின்னர் உரிய சிகிச்சை
அளிக்கப்படும் என சொன்னார். வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் , தீவிர சிகிச்சை பிரிவில் தந்தை இருப்பதால், பார்க்கவும் முடியாத நிலையில் முகுந்தனின்  பிள்ளைகள் மிக கவலையுடன், ஆனால்  நல்ல உயர்ந்த மருத்துவமனையில் அப்பாவிற்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவ்விடம் விட்டு அகன்றனர்.

மறுநாள் காலை ICU விற்கு வெளியே பிராத்தனையுடன் காத்திருத்தனர் டாக்டர்க்காக. டாக்டர் வந்து முகுந்தன் அவர்களுக்கு 70-80 %நுரையீரல் சளி அடைந்திருப்பதாகவும், (பரிசோதனையில் கோவிட் இல்லையென்றாலும் )கோவிட் அறிகுறியாக கருதி சிகிச்சை தொடங்குவதாகவும்  கூறினார்.

மேலும் சிகிச்சை முறைகளை விளக்கி  இப்போது முகுந்தன் கோவிட்  முதல் நிலையில் அதாவது செயற்கை பிராணவாயுவில்  (ஆக்சிஜென் சப்ளையில்  )இருப்பதாகவும், முன்னேற்றம் ஏதுமில்லாவிட்டால்  இரண்டாம் நிலை சிகிச்சையாக தொண்டையில் குழாய் வழியாக சுவாசிக்கும் சிகிச்சையும் , மூன்றாம் நிலை சிகிச்சையாக செயற்கை சுவாச கருவியுடன் இணைக்க படுவார் என  பேரிடியை மிக சாதாரணமாக அமைதியாக கூறினார். மிகுந்த மனவலியுடன், வேறு வழியில்லாமல் டாக்டர் சொன்ன அனைத்துக்கும் ஒப்பு கொண்டனர் பிள்ளைகள். பின்னர் சொன்னார் டாக்டர் பல பல புரியா மருந்துகளின் பெயர்களை(ரெம்டெசிவீர் ,டோஸிலீஸுமபு) டோஸிலீஸுமபு ஒரு டோஸ் 40000 ரூபாய் எனவும், 2 அல்லது 3 டோஸ் கொடுத்தும் முன்னேற்றம் இல்லாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டிவரும் என்றும்  கூறினார். கடைசியாக கோவிட்  ஒரு கொடிய நோய், மிக சிலரே பிழைக்கின்றனர், நாங்கள்  எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் செய்வோம் என கூறி சென்றார்.

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே (முதல் நாள் மாலை )

முகுந்தன் கண்விழித்து பார்க்கும்போது  தான்  ஒரு கண்ணாடி அறையில்  தனித்து இருப்பதை உணர்ந்தார்.ஒரே ஒரு நர்ஸ் மட்டும் முழு பாதுகாப்பு உடையில் அங்கு இருப்பது புரிந்தது. இது மாதிரி  பாதுகாப்பு உடை பற்றி டிவி செய்திகளில் கேட்டுயிருக்கிறார் , பார்த்துயிருக்கிறார். கோவிட்  சிறப்பு பாதுகாப்பு உடையல்லவா இது. இவர் ஏன் அணிந்துஇருக்கிறார் ? நான் ஏன்
இங்கே இருக்கிறேன்? தான்  70 வயதில் கோவிட் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிரோம் என்பதை அவரால் தாங்கமுடியாமல் அழத்தொடங்கினர். நர்ஸ் அவரை சமாதானப்படுத்த முயன்றார். தன்  பிள்ளைகளை அழைத்து தன்னை உடனே வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு சொல்ல சொன்னார் நர்ஸிடம். நர்ஸ் அவருக்கு ஏதோ மருந்து கொடுக்க அப்படியே உறங்கிப்போனார்.

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே (இரண்டாம்  நாள் காலை )

மறுபடியும் கண்விழித்து பார்த்தபோது, தான் அதே அறையில் சில குழாய்களுடன்
இணைக்கப்பட்டு  இருப்பதை உணர்ந்தார் .

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே  (இரண்டாம்  நாள்)

முகுந்தனின் பிள்ளைகள் அவரை கண்ணாடி கதவு  வழியாக பார்த்து , வீடியோ காலில்  பேசினர். தனக்கு ஏதும் சரியாக கேட்கவில்லை என முகுந்தன் புலம்பினார். நர்ஸ் போனை பிள்ளைகளிடம் கொடுத்து விட்டு , அவர் எப்போதும் உங்களை பார்க்க வேண்டும், வீட்டிற்கு போக வேண்டும்
என்று சொல்லி கொண்டேயிருக்கிறார் என்று  கூறினார்.
அப்பாவின் உடல்நிலை பற்றிய கவலையோடு வீடு வந்தனர் பிள்ளைகள் இருவரும். சிறிது
நேரத்தில் கைபேசி அழைத்தது.முகுந்தனின் மகன், தன் மாமாவிடம் போனை  கொடுத்தான்.
பேசியது அந்த பிரபல மருத்துவமனையிருந்து ஒரு பெண். முகுந்தனின் ரத்த வகை, மற்றும் சில தகவல்கள் கேட்டார்.

12 வருடங்களுக்கு முன் மாமாவிற்கு ஏற்பட்ட அனுபவம் , இதேபோல் ஒரு பிரபல உயர்தர
மருத்துவமனையில் அவர் தந்தை அதிகமான மார்பு சளி, சுவாச கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டு , பெரும் தொகை செலவு செய்த பின்னும், 3 மாதத்திற்கு  பிறகு சிகிச்சை பலனின்றி  இறந்தார்.
அதே மாதிரியான நுரையீரல் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைக்கு போகாமல் மிக சாதாரண ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற்று குணமானர் மாமா.

இவ்வனுபவங்களால் பெரிய மருத்துவமனைகளை பற்றி மாமாக்கு நன்கு தெரியும். பரிசோதனை இல்லாமல் கோவிட் சிகிச்சை பிரிவில் சேர்த்தது பற்றி பிள்ளைகளை கடிந்து கொண்டார். இப்போது மருத்துவமனையிலிருந்து வீட்டில் வேறு யாருக்கு AB+ ரத்த வகை உண்டோ அவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முடியும் என சொல்ல, மாமாக்கு கோபம் தலைக்கேறியது.

பிளாஸ்மா சிகிச்சை பற்றி அந்த பெண்ணிடம் மாமா கேட்க , அந்த பெண் நான் தகவல் சொல்லும் பிரதிநிதி , சிகிச்சை பற்றி தெரியாது என சொல்ல, மாமா அவருக்கு பிளாஸ்மா பற்றிய முழு தகவலும் சொன்னார். அத்தனையும் கேட்டு கொண்டுவிட்டு , அந்த பெண் அப்போது நாங்கள்  வெளியில் இருந்து பிளாஸ்மா வரவைக்கிறோம். 200 மில்லி   ரூபாய் 69000 ஆகும் என்றார். அதை கேட்ட மாமாக்கு மேலும் கோபம் அதிகமாகி சத்தம் போடா தொடங்கினார். கோவிட் பரிசோதனையே செய்யாமல் பிளாஸ்மா சிகிச்சை பற்றி பேசி காசு பார்க்க நினைக்கும் மருத்துவமனையை நன்கு சாடினார்.

பிளாஸ்மா சிகிச்சை பிளாஸ்மா சிகிச்சை என்றால் கோவிட் வந்து குணமான ஒருவரின் ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களை எடுத்து கோவிட் நோயாளிக்கு செலுத்தி அளிக்கும் சிகிச்சை. ஆனால் இதில் சில சிக்கல்களும் உண்டு. பிளாஸ்மா கொடுத்தவரின் ரத்தத்தில் இருக்கும் வேறு சில வைரஸ் பாக்டீரியாவால் நோயாளிக்கு சிக்கல்கள் வர வாய்ப்பு  உண்டு.
சிறிது நேரத்தில் சிகிச்சை பற்றி விளக்கம் அளித்த டாக்டர் போனில் அழைத்து நடந்த
குழப்பத்திற்கு மன்னிப்பு தெரிவித்து விளக்கம் அளித்தார். தகவல் அளித்த பெண் சரியாக முழுதும் தெரியாமல் பேசி விட்டார் என்று கூறினார்.

முகுந்தன் அவர்களுக்கு 90% நுரையீரல் அடைப்பு இருப்பதாகவும் , அதனால் பிளாஸ்மா சிகிச்சை பற்றி யோசிப்பதாகவும், அவர்களின் கருத்தை நோயாளி கோப்பில் எழுத, நிர்வாக பிரதிநிதி நோயாளியின் குடும்பத்திற்கு தெரிவிக்க அழைத்ததாக கூறி, நங்கள் எங்களால் முடிந்த அணைத்து சிகிச்சைகளையும் பரிசீலிப்பதாக முடித்தார்.
மாமா, நேற்று 70-80% ஆகா இருந்த நுரையீரல் அடைப்பு இப்போது 90 ஆகிவிட்டதா, இது
போனில் விவாதிக்கும் விஷயம் இல்லை என்று சத்தம் போட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே (மூன்றாம் நாள்)

முகுந்தன் அந்த தனியறையில் , தான் வணங்கின அணைத்து கடவுள்களும் அவரை கைவிட்டு விட்டதாக வருந்தினார்.தன்  குடும்பத்தோடு இல்லாமல், பிள்ளைகளை பார்க்காமல் இருப்பதே அவருக்கு மூச்சு முட்டுவதாக இருந்தது. ஒரே ஒரு நர்ஸை தவிர அவரால் வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து கொண்டிருந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவு வெளியே (மூன்றாம் நாள்)

மாமாவும் முகுந்தனின் பிள்ளைகளும் டாக்டர்க்காக காத்திருந்தனர்.தீவிர சிகிச்சை, அதும் கோவிட் தீவிர சிகிச்சை என்றால் நோயாளியின் நிலைமை மோசம் என்று அனைவர்க்கும் தெரியும். அனால் அதைவிட மோசமான நிலைமை , மனநிலை அவரின் குடும்பத்தினருக்கு தான்.  டாக்டர் வந்து சொல்லும் சில ஆறுதல் வார்த்தைகளுக்கும், அந்த சில நிமிடங்களுக்கும் , 24 மணி நேரம் காத்திருக்க  வேண்டும்.

தலைமை டாக்டர் வந்து முகுந்தனின் உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை , சுவாசம் சிரமமாகவே இருப்பதால், ஆக்சிஜென் சப்ளையில் இருப்பதாக சொல்லி, பிளாஸ்மா சிகிச்சை அவரின் வயதுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று பார்க்கலாம், அதும் உங்களின் ஒப்புதல் உடன் மட்டுமே செய்வோம் என்று சொல்லி, நீங்கள் அவரை பார்க்கலாம் என்றார் . வீடியோ கால் மூலம் தூங்கி கொண்டிருந்த தந்தையை பார்த்தனர் பிள்ளைகள்.

இதற்குள் முகுந்தனின் உடல் நிலை பற்றி தெரியவந்த சுற்றமும், நட்பும் போனில் அழைத்து விசாரிக்க தொடங்கினர். அவரவருக்கு தெரிந்த வைத்தியமும், கேட்ட கதைகளையும் சொல்லி, இருக்கும் பதட்டத்தை மேலும் அதிகப்படுத்தினர்.

பதற்றம் நாளையும் தொடரும்….

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com